2009-05-29 10:42:12

மே 29 நற்செய்தி யோவா. 21, 15-19


அக்காலத்தில் இயேசு சீமோன் பேதுருவிடம் 'யோவானின் மகன் சீமோனே நீ இவர்களைவிட மிகுதியாக என்மீது அன்பு செலுத்துகிறாயா?' என்று கேட்டார். அவர் இயேசுவிடம் 'ஆம் ஆண்டவரே எனக்கு உம்மிடம் அன்பு உண்டு என உமக்குத் தெரியுமே! 'என்றார். இயேசு அவரிடம் 'என் ஆட்டுக்குட்டிகளைப் பேணி வளர்' என்றார்.'இவர்களை' என்னும் சொல்லை 'இவற்றை' எனவும் மொழிபெயர்க்கலாம். இரண்டாம் முறையாக இயேசு அவரிடம் யோவானின் மகன் சீமோனே நீ என்மீது அன்பு செலுத்துகிறாயா? ' என்று கேட்டார். அவர் இயேசுவிடம் ' ஆம் ஆண்டவரே எனக்கு உம்மிடம் அன்பு உண்டு என உமக்குத் தெரியுமே! ' என்றார். இயேசு அவரிடம் ' என் ஆடுகளை மேய் ' என்றார். மூன்றாம் முறையாக இயேசு அவரிடம் ' யோவானின் மகன் சீமோனே உனக்கு என்னிடம் அன்பு உண்டா? ' என்று கேட்டார். ' உனக்கு என்னிடம் அன்பு உண்டா? ' என்று இயேசு மூன்றாம் முறை கேட்டதால் பேதுரு துயருற்று அவரிடம் ' ஆண்டவரே உமக்கு எல்லாம் தெரியுமே! எனக்கு உம்மீது அன்பு உண்டு என்பது நீர் அறியாத ஒன்றா? ″ என்றார். இயேசு அவரிடம் ″ என் ஆடுகளைப் பேணிவளர். ″ 'நீ இளைஞனாக இருந்தபோது நீயே இடையைக் கட்டிக்கொண்டு உனக்கு விருப்பமான இடத்தில் நடமாடிவந்தாய். உனக்கு முதிர்ந்த வயது ஆகும்போது நீ கைகளை விரித்துக் கொடுப்பாய். வேறொருவர் உன்னைக் கட்டி உனக்கு விருப்பம் இல்லாத இடத்திற்குக் கூட்டிச்செல்வார் என உறுதியாக உனக்குச் சொல்கிறேன் ' என்றார். பேதுரு எவ்வாறு இறந்து கடவுளை மாட்சிப்படுத்தப் போகிறார் என்பதைக் குறிப்பிட்டே அவர் இவ்வாறு சொன்னார். இதைச் சொன்ன பின் பேதுருவிடம் ' என்னைப் பின் தொடர் ' என்றார்.








All the contents on this site are copyrighted ©.