2009-05-29 17:31:11

தந்தை பியோவின் திருத்தலம் செல்கிறார் திருத்தந்தை . 2905 .


தந்தை பியோவின் திருத்தலத்துக்குச் செல்கிறார் திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட்.

புனித தந்தை பியோவின் திருத்தலம் இத்தாலியின் பியத்ரெல்சீனாவில் உள்ளது . தந்தை பியோ 2002 ஆம் ஆண்டில் புனிதர் என முந்நாள் திருத்தந்தையால் அறிவி்க்கப்பட்டார் . தந்தை பியோ என்ற மக்களால் அழைக்கப்படும் புனித பியோவின் திருத்தலத்தில் உள்ள கல்லறைக்கு திருத்தந்தை ஜூன் மாதம் 21 ஆம் தேதி செல்ல உள்ளதாக சான் ஜொவானி ரொட்டோண்டோ திருத்தலத்தின் பொறுப்பாளர்களாகிய கப்புச்சின் துறவற சபையினர் தெரிவித்துள்ளனர் . அஞ்ஞாயிறு காலை 9.15 மணிக்குத் திருத்தந்தை அங்கு ஹெலிகாப்டரில் செல்வார் . தம் காரில் நகரை வலம் வந்த பிறகு அங்குள்ள அருள்மாதா திருத்தலம் செல்வார் . அங்கிருந்து தந்தை பியோ 1968 ல் காலமானபோது வாழ்ந்த துறவற மடத்தின் அறைக்குச் செல்வார் . பின்னர் தந்தை பியோ நல்லடக்கம் செய்யப்பட்ட கல்லறைக்குச் செல்வார் . பின்னர் காலை 10.15 மணிக்கு தூய பியோ பியத்ரெல்சீனா பேராலயத்தில் திருப்பலி நிகழ்த்துவார் . திருப்பலிக்குப்பின் நண்பகல் மூவேளை செபத்தை நிகழ்த்துவார் . மாலையில் 4.45 மணிக்கு தந்தை பியோ தொடங்கிவைத்த மருத்துமனைக்குச் சென்று அங்குள்ளோரைச் சந்திப்பார் . மாலையில் பேராலயத்தில் குருக்கள் , துறவியர் , இளைஞர்களைச் சந்தித்த பிறகு வத்திக்கானுக்கு மாலை 7.30 க்கு ஹெலிகாப்டரில் வந்து சேர்வார் .








All the contents on this site are copyrighted ©.