2009-05-29 17:40:25

கிறிஸ்தவத் தலைவர்கள் , ஒரிசா முதலமைச்சர் சந்திப்பு .290509 .


கிறிஸ்தவத் தலைவர்கள் ஒரிசாவின் முதலமைச்சர் நவீன் பாட்நாயக்கைச் சந்தித்தனர் . புவனேசுவரத்தின் பேராயர் ரபேல் சீனத் குழுவினரோடு சென்று முதலைமைச்சரைச் சந்தித்தார் . கிறிஸ்தவர்களின் தேவைகளை நிறைவேற்றுமாறு வேண்டுகோள் வைத்துள்ளனர் . இன்னும் 3000 கிறிஸ்தவர்கள் ஆகஸ்ட் 2008 ல் நடந்த வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் . அரசு முகாம்களி்ல் தங்கியுள்ளவர்களில் 900 குடும்பங்கள் தங்கள் சொந்த இடங்களுக்குச் செல்லமுடியாத நிலையில் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என அச்சுறுத்தப்பட்டுள்ளனர் . மாநில அரசு கிறிஸ்தவர்களின் நலம்காக்க ஆவன செய்யும் என முதலமைச்சர் நவீன் பாட்நாயக் உறுதிகூறியுள்ளார் .



இதற்கிடையே ஐக்கிய திருச்சபைகள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுப்பதற்குத் திட்டமிட்டுள்ளனர் . காந்தமால் மாவட்டத்தில் வீடிழந்த மக்களுக்கு திருச்சபைகளும் மாவட்ட அதிகாரிகளும் இணைந்து வீடுகள் கட்டிக்கொடுக்கத் திட்டமிட்டுள்ளனர் . மாவட்ட ஆட்சியாளர் தக்க பாதுகாப்புக் கொடுப்பதாகத் தெரிவித்துள்ளார் .








All the contents on this site are copyrighted ©.