2009-05-28 17:38:58

பாகிஸ்தானில் முஸ்லிம் அல்லாத சிறுபான்மையினருக்கு பணி வாய்ப்பு. 280509.


பாகிஸ்தானில் முஸ்லிம் அல்லாத சிறுபான்மையினர் அரசு அலுவல்களில் 5 விழுக்காடு பணி வாய்ப்புப் பெற இட ஒதுக்கீட்டுக்குச் சட்டம் இயற்றப்பட்டுள்ளது . இது அங்கு வாழும் மதச் சிறுபான்மை மக்களுக்கு தரமான வாழ்வைத் தருவதோடு , அவர்களுக்கு முக்கியத்துவத்தையும் கொடுக்கும் எனத் தெரிவித்துள்ளார் சிறுபான்மை மக்களுக்கான கத்தோலிக்க அமைச்சர் சபாஷ் பாட்டி . அரசைச் சேர்ந்த அனைத்து நிறுவனங்களிலும் அவர்களுக்கு பணி வாய்ப்பு அளிக்கப்பட உள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார் . நாட்டுத்தலைவர் சர்தாரியின் இந்த முற்போக்குச் செயலுக்கு சிறுபான்மை சமுதாயத்தின் சார்பில் நன்றி தெரிவித்துள்ளார் கத்தோலிக்க அமைச்சர் சபாஷ் .








All the contents on this site are copyrighted ©.