2009-05-27 10:38:25

மே மாதம் 27 புனித அகஸ்தீன் . காண்டர்பரி ஆயர். கி .பி.605.


இங்கிலாந்தின் காண்டர்பரி நகரின் முதல் ஆயர் இவர்தான் . இங்கிலாந்து நாட்டின் பாதுகாவலர் . உரோமைத் துறவற மடத்திலிருந்து இவரது தலைமையில்தான் திருத்தந்தை கிரகோரியார் 40 துறவிகளை இங்கிலாந்து நாட்டுக்கு மறைபரப்புப் பணிக்காக அனுப்பி வைத்தார் . அங்கே இங்கிலாந்து நாட்டு மக்கள் மிருகத்தனமானவர்கள் எனக் கேள்விப்பட்டதும் அஞ்சினார்கள். இருப்பினும் திருத்தந்தை கிரகோரியார் ஊக்கமளித்ததால் துணிவடைந்து கி.பி. 597 இல் தானெட் என்ற தீவை அடைந்தனர் . இவர்களது அயராத உழைப்பும் அஞ்சா நெஞ்சமும் வெற்றியைக் கொணர்ந்தது . இவர்களது எளிய வாழ்க்கையும் ஆழ்ந்த செப வாழ்வும் அரசனைப் பெரிதும் கவர்ந்தன . அரசன் எதல்பெட் தூய ஆவியின் திருநாளன்று மெய்மறையில் சேர்ந்தார் . ஏனையோர் பெருங்கூட்டமாக கிறிஸ்துமஸ் அன்று திருநீராட்டுப் பெற்றனர் . நாளடைவில் இவர்களின் விசுவாசம் வியத்தகு முறையில் வளர்ச்சி பெற்றுவிட்டது . திருத்தந்தையுடன் தொடர்பும் நாளுக்குநாள் உறுதிப்பட்டது . இவர்கள் “ஆங்கில்ஸ் அல்லர் . ஏஞ்சல்ஸ்” , வானதூதர்கள் என்று புகழாரம் சூட்டினாராம் புனித அகஸ்தீன் .



நம் சிந்தனைக்கு – “மிக மேலான செயல்களை இறைவன் இன்றைக்கும் இந்த ஆங்கிலேயர்களின் நடுவில் மட்கலங்களைக்கொண்டு செய்து முடிக்கின்றார்” , என்று திருத்தந்தை பெரிய கிரகோரியார் அன்று புகழ்ந்துரைத்ததை நம் மனதில் கருதுவோம் .








All the contents on this site are copyrighted ©.