2009-05-27 15:05:18

உலக அளவில் பொருளாதார நெருக்கடிகள் இருக்கின்ற போதிலும் கடந்த ஆண்டில் மிகுந்த அளவில் நன்கொடைகள் கிடைத்தது, ஜெர்மன் பிறரன்பு அமைப்பு


மே27,2009.உலக அளவில் பொருளாதார நெருக்கடிகள் இருக்கின்ற போதிலும் கடந்த ஆண்டில் மிகுந்த அளவில் நன்கொடைகள் கிடைத்ததாக எய்ட் டு த சர்ச் ன் நீட் என்ற ஜெர்மன் பிறரன்பு அமைப்பு அறிவித்தது.

ஐரோப்பா, வட தென் அமெரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய பகுதிகளின் 18 நாடுகள் வழங்கிய நன்கொடைகள் 8 கோடியே 20 இலட்சத்துக்கு அதிகமான யூரோக்கள் என்றும் இது முந்தைய ஆண்டைவிட 3 விழுக்காடு அதிகம் என்றும் அவ்வமைப்பு வெளியிட்ட ஆண்டறிக்கை தெரிவிக்கின்றது.

இந்நிதி உதவியானது ஆலயங்கள், துறவுமடங்கள், குருத்துவ கல்லூரிகள், பங்கு இல்லங்கள், மையங்கள் ஆகியவற்றைக் கட்டுவதற்கு அல்லது புதுப்பிப்பதற்கென 137 நாடுகளில் 5020 திட்டங்களுக்குப் பயன்படுத்தப்பட்டது என்றும் அவ்வறிக்கை கூறுகிறது.

உலகிலுள்ள குருத்துவ மாணவர்களில் 8 பேருக்கு ஒருவர் வீதம் அதாவது 14 739 மாணவர்க்கு உதவியுள்ளது இவ்வமைப்பு.

11 இலட்சம் சிறார் விவிலியங்களையும் 3,65,000 மறைக்கல்வி ஏடுகளையும் விநியோகித்ததன் மூலம் குடும்பங்களுக்கும் இவ்வமைப்பு உதவியிருப்பதாக அவ்வறிக்கை கூறியது







All the contents on this site are copyrighted ©.