2009-05-26 15:09:53

பாதுகாப்புப் பகுதிகளில் இலங்கை இராணுவம் தொடர்ந்து குண்டுமழை பொழிந்தது, கத்தோலிக்கக் குரு


மே26.2009. பொது மக்களைக் காப்பதற்கென இலங்கை அரசால் அறிவிக்கப்பட்ட பாதுகாப்புப் பகுதிகளில் இராணுவத்தினர் தொடர்ந்து குண்டுமழை பொழிந்ததாகக் குற்றம் சாட்டியுள்ளார் அப்பகுதியில் இருந்த கத்தோலிக்கக் குரு ஒருவர்.

பாதுகாப்புப் பகுதிகளில் இராணுவம் குண்டுமழை பொழிந்த அதவேளை போரின் கடைசி நாட்களில் தமிழ்ப் போராளிகளும் மக்களை நோக்கிச் சுட்டதாகக் கூறியுள்ளார் அக்குரு.

மோதல்களுக்குப் பயந்து தன் பங்கு மக்களைக் காப்பாற்றும் நோக்குடன் அவர்களுடன் கடந்த நவம்பரிலிருந்தே இடம்விட்டு இடம் குடிபெயர்ந்து வரும் அவர் ஒரு இலட்சத்துக்கு மேற்பட்ட அப்பாவி மக்கள் கூடியிருந்த பாதுகாப்புப் பகுதியில் இராணுவத்தினர் குண்டுமழை பொழிந்ததாகக் குற்றம் சாட்டினார்.

இவ்வாண்டில் மட்டும் மோதலில் இருபதாயிரம் பேர்வரை உயிரிழந்திருக்கலாம் எனவும் அவர் கூறினார்.

கம்பிவலைகளால் தடுக்கப்பட்டுள்ள மானிக் பாம் முகாம் இரண்டாம் உலகப்போரின் நாத்சி வதைப்போர் முகாம் போல் தோன்றுவதாக உரைத்த அக்குரு, அம்முகாமிலேயே இருபது குருக்கள் மக்களுடன் தடுப்புக் காவல் போல் வைக்கப்பட்டுள்ளதாகவும் அதில் ஒரு குரு காணாமற் போயுள்ளதாகவும் கூறினார்.








All the contents on this site are copyrighted ©.