2009-05-25 14:13:18

வரலாற்றில் மே 26


புனித பிலிப்புநேரி விழா. இத்தாலியின் பிளாரன்ஸ் நகரில் பிறந்த பிலிப்புநேரி, 26 வயது நடக்கும் போது வணிகத் தொழிலைவிட்டு விட்டு ஆன்மீகத்தில் நாட்டம் கொண்டு உரோமை சென்றார். குருவான பின்னர் 33 ஆண்டுகள் ஆரட்டரி என்றழைக்கப்படும் செபக் குழுவைப் பல குருக்களைச் சேர்த்துக் கொண்டு நடத்தினார். இவரை உரோம் நகரின் இரண்டாம் அப்போஸ்தலர் என அழைக்கிறார்கள்.

1965 கடலில் வாழ்வுக்குப் பாதுகாப்பு குறித்த சீரமைக்கப்பட்ட சர்வதேச ஒப்பந்தம் அமலுக்கு வந்தது.

1966 கயானா பிரிட்டனிடமிருந்து சுதந்திரம் அடைவதாக அறிவித்தது.

1969 அப்போலோ 10 விண்கலம் பூமிக்குத் திரும்பியது

1986 ஐரோப்பிய சமுதாயம் ஐரோப்பிய கொடியை ஏற்றது








All the contents on this site are copyrighted ©.