2009-05-24 16:07:51

காலக் கண்ணாடி ................... மே 25 .


புனித வணக்கத்துக்குரிய பேதா . கி.பி. 673– 735 .

இங்கிலாந்தின் வேர்மவுத் என்னும் இடத்தில் பிறந்தவர் . இளமையிலேயே துறவு நிலையைத் தேர்ந்த இவர் வாழ்நாட்களிலேயே புனிதராகப் போற்றப்பட்டவர் . கற்பதிலும் , தியானத்திலும் வாழ்நாட்களைச் செலவழித்தார் . இவர் எழுதிய 45 நூற்களும் புகழ் மிக்கவை .



புனித ஏழாம் கிரகோரியார் கி.பி. 1028-1085 .



டஸ்கனி நாட்டில் பிறந்தவர் . இவரது இயற்பெயர் ஹில்டர்பிராண்ட் . உரோமையில் படிப்பை முடித்தபிறகு துறவியானார் . 5 பாப்பிறைகளுக்கு ஆலோசகராக இருந்தார் . 1073 ல் பாப்பிறையாகத் தேர்வு செய்யப்பட்டார் . திருச்சபையில் பல சீர்திருத்தங்களைக் கொண்டுவந்தார் .



அதே நாளில் புனித பாஸி மரிய மதலேனம்மாள் கன்னிகை கி.பி. 1566-1607 .

இத்தாலியின் பிளாரன்ஸ் நகரில் பிறந்த இவர் 16 வயதில் கார்மேல் துறவு மடத்தில் சேர்ந்தார் . பேயினால் 50 ஆண்டுகள் துன்புற்றிருக்கிறார் . ஆண்டவர் இயேசுவின் தரிசனங்களைப் பெற்ற இவர் இயேசுவின் 5 காயங்களையும் தம்முடலில் கொண்டிருந்திருக்கிறார் . இவ்வாரு வேதனையின் நடுவே அவரது 41 வயதில் இறைவனடி சேர்ந்தார் .

நாம் துன்பங்களைச் சுமக்கவேண்டும் என்பது இறைவனின் திருவுளம் . இதை மனத்துணிவுடன் சுமப்போம் . சுமைகள் குறையும் .








All the contents on this site are copyrighted ©.