2009-05-23 13:36:41

காங்கோ நாட்டைக் கட்டி எழுப்ப ஐ.நா., கத்தோலிக்கரின் உதவிக்கு விண்ணப்பம், தலத்திருச்சபை


மே23,2009. மோதல்களுக்குப் பின்னான காங்கோ நாட்டைக் கட்டி எழுப்புவதற்கு ஐக்கிய நாடுகள் நிறுவனம் மற்றும் கத்தோலிக்கரின் உதவிக்கு விண்ணப்பித்தார் அந்நாட்டு ஆயர் நிக்கொலாஸ் ஜோமோ லோலா.

ஒருகாலத்தில் ஜயீர் என்றழைக்கப்பட்ட காங்கோ புரட்சியாளர்களின் தாக்குதல்களால் பாதிக்கப்பட்டுள்ளவேளை, அதனை மீண்டும் கட்டி எழுப்புவதற்கு அமெரிக்க ஐக்கிய நாடு, கானடா, பெல்ஜியம் ஆகிய நாடுகளின் உதவிக்கு ஏற்கனவே விண்ணப்பித்துள்ளனர் அந்நாட்டு குருக்கள் மற்றும் கன்னியர்.

தற்சமயம் அமெரிக்க ஐக்கிய நாட்டிற்குச் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள ஆயர் லோலா, புலம் பெயர்ந்துள்ள மக்கள் தங்கள் வீடுகளில் குடியமர உதவிகள் தேவைப்படுகின்றன என்றார்.

புரட்சியாளர்களுக்குப் பயந்து 17 இலட்சத்து 50 ஆயிரம் பேர் நாட்டிற்குள்ளே அகதிகளாக உள்ளனர் மற்றும் 6 இலட்சம் பேர் அண்டை நாடுகளுக்குச் சென்றுள்ளனர் என்றும் ஆயர் கூறினார்








All the contents on this site are copyrighted ©.