2009-05-22 15:24:38

மாசிடோனியாவும் பல்கேரியாவும் தங்கள் கிறிஸ்தவ மூலங்களுக்கு பிரமாணிக்கமாக இருந்து ஐரோப்பாவை கட்டி எழுப்பத் தங்கள் பங்கை ஆற்ற முடியும், திருத்தந்தை


மே22,2009. மாசிடோனியாவும் பல்கேரியாவும் தங்கள் கிறிஸ்தவ மூலங்களுக்கு பிரமாணிக்கமாக இருந்து ஐரோப்பாவை கட்டி எழுப்பத் தங்கள் பங்கை ஆற்ற முடியும் என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.

ஸ்லாவிய திருத்தூதர்களான புனிதர்கள் சிரில் மெத்தோடியஸ் விழா, ஆர்த்தோடாக்ஸ் சபையில் மே24, இஞ்ஞாயிறன்று சிறப்பிக்கப்படுவதை முன்னிட்டு இவ்வெள்ளிக்கிழமை திருப்பீடத்தில் மாசிடோனியா மற்றும் பல்கேரிய நாடுகளின் அரசுத் தலைவர்களுடன் தனித்தனியாகச் சந்திப்புக்களை நடத்திய போது இவ்வாறு கூறினார் திருத்தந்தை.

பல்கேரிய அரசுத் தலைவர் ஜார்ஜி பார்வநோவைச் சந்தித்து உரையாற்றிய போது புனிதர்கள் சிரில் மெத்தோடியஸின் ஆன்மீக மரபு ஸ்லாவ் இன மக்களில் தொடர்ந்து பிரதிபலிப்பதாகக் கூறினார் திருத்தந்தை.

முன்னாள் யூக்கோஸ்லாவியாவைச் சேர்ந்த மாசிடோனியா அரசுத் தலைவர் ஜார்ஜ் இவாநோவுடன் நடைபெற்ற சந்திப்பில், வருங்காலத்தில் அனைவருக்கும் முன்னேற்றம், நீதி மற்றும் அமைதிக்காக ஏங்கும் மூன்றாம் மில்லேனேய ஐரோப்பாவை கட்டி எழுப்ப கிறிஸ்தவர்கள் உதவ முடியும் என்றார்.

புனிதர்கள் சிரில் மெத்தோடியஸ் விழாவை முன்னிட்டு ஆர்த்தோடாக்ஸ் சபை பிரதிநிதி குழு வத்திக்கானில் திருத்தந்தையை சந்திப்பது வழக்கமாக இருந்து வருகின்றது.

இவ்வாண்டில் இதுவரை அரசுத்தலைவர்கள், பிரதமர்கள், அரசியல் பிரமுகர்கள் என 15 பேரைச் சந்தித்துள்ளார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்








All the contents on this site are copyrighted ©.