2009-05-22 15:27:44

கத்தோலிக்கர் தங்கள் விசுவாசத்தை உறுதியுடன் வெளிப்படுத்த வெஸ்ட்மின்ஸ்ட்டர் பேராயர் அழைப்பு


மே22,2009. விசுவாசம் ஒருபொழுதும் தனிப்பட்ட செயல்பாடு இல்லை மற்றும் அது ஒருவரின் தனிச்சொத்தாகவும் இருக்க முடியாது என்றுரைத்து கத்தோலிக்கர் தங்கள் விசுவாசத்தை உறுதியுடன் வெளிப்படுத்துமாறு பிரிட்டனின் வெஸ்ட்மின்ஸ்ட்டரின் புதிய பேராயர் கேட்டுக் கொண்டார்.

கிறிஸ்துவில் கொண்டுள்ள விசுவாசம் எப்பொழுதும் குழுவாகச் செயல்படுத்த அழைப்புவிடுக்கின்றது மற்றும் இது பொதுப்படையான கூறைக் கொண்டுள்ளது என்று இவ்வியாழன் மாலை வெஸ்ட்மின்ஸ்ட்டர் பேராலயத்தில் புதிய பேராயராகத் திருநிலைப்படுத்தப்பட்ட திருப்பலி மறையுரையில் கூறினார் பேராயர் வின்சென்ட் நிக்கொலாஸ்.

2000 த்துக்கு மேற்பட்ட விசுவாசிகளும் பல முக்கிய பிரமுகர்களும் கலந்து கொண்ட திருப்பலியில் மறையுரையாற்றிய பேராயர் நிக்கொலாஸ், கிறிஸ்தவ சமூகம் இன கலாச்சார மற்றும் சமூக வேறுபாடுகளைக் கடந்து சென்றுள்ளது, பிரிட்டன் சமூகத்திற்கும் தனிப்பட்டவர்களுக்கும் புதிய கண்ணோட்டத்தைக் கொடுத்துள்ளது என்றார்.

வெஸ்ட்மின்ஸ்ட்டர் உயர்மறைமாவட்டத்தில் ஏறத்தாழ நான்கு இலட்சம் கத்தோலிக்கர் உள்ளனர்.








All the contents on this site are copyrighted ©.