2009-05-22 15:26:39

உலகளாவிய பொருளாதார நெருக்கடி, குடியேற்றதாரர் மற்றும் அகதிகள் மீது எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்துகின்றது, சர்வதேச காரித்தாஸ்


மே22,2009. உலகளாவிய பொருளாதார நெருக்கடி, குடியேற்றதாரர் மற்றும் அகதிகள் மீது எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்துகின்றது என்று சர்வதேச காரித்தாஸ் அமைப்பின் தலைவர் கூறினார்.

குறைந்த ஊதியத்தைக் கொண்டுள்ள வேலைகள் மறைந்து வருகின்றன மற்றும் வெளிநாட்டவர் மீதான எதிர்ப்பு வளர்ந்து வருகின்றது என்று லெஸ்லி ஆன் நைட் தெரிவித்தார்.

அந்நியரை மதித்தல்- வரவேற்பு மூலம் பயத்தை அகற்றுதல் என்ற தலைப்பில் உரோமையில் திறக்கப்பட்ட அகதிகள் பற்றிய அருங்காட்சியக திறப்பு நிகழ்வில் பேசிய காரித்தாஸ் தலைவர் நைட் இவ்வாறு கூறினார்.

உலகம் பொருளாதார நெருக்கடியை அதிகம் எதிர்நோக்க எதிர்நோக்க, நாடுகளின் எல்லைப்புறங்கள் மூடப்படுகின்றன, வேலைவாய்ப்புகள் மறைந்து வருகின்றன, குடியேற்றதாரருக்கும் அகதிகளுக்கும் வாழ்க்கை மிகவும் கடினமாகிக் கொண்டு வருகிறது என்று அவர் மேலும் கூறினார்.

உலகில் 50 பேருக்கு ஒருவர் வீதம் அதாவது 15 கோடிக்கு மேற்பட்டோர் தங்களது சொந்த இடங்களைவிட்டு குடியேற்றதாரராகவோ அகதியாகவோ வாழ்கின்றனர் என்ற ஐ.நா.வின் கணக்கெடுப்பையும் சுட்டிக்காட்டினார் சர்வதேச காரித்தாஸ் தலைவர்.








All the contents on this site are copyrighted ©.