2009-05-21 13:58:36

புனிதபூமி திருப்பயணத்தின் போது திருத்தந்தை மிக மனஉறுதியுடனும் செயல்பட்டது குறித்து அமெரிக்க ஐக்கிய நாட்டு குழு ஒன்று தன் பாராட்டுதல்களை வெளியிட்டுள்ளது


மே21,2009. புனிதபூமி தன் அண்மைத் திருப்பயணத்தின் போது திருத்தந்தை 16ம் பெனடிக்ட், மிக மனஉறுதியுடனும் செயல்பட்டது குறித்து அமெரிக்க ஐக்கிய நாட்டின் மதங்களிடையேயான பேச்சுவார்த்தைகளை ஊக்குவிக்கும் குழு ஒன்று தன் பாராட்டுதல்களை வெளியிட்டுள்ளது.

அரசியல் ரீதியாகவும் மத மற்றும் கலாச்சார வேறுபாடுகளாலும் பிரிந்து கிடக்கும் மத்திய கிழக்குப் பகுதியில் அனைவருக்குமான இறைவனின் அமைதிச் செய்தியை எடுத்துச் செல்வது அவ்வளவு எளிதல்ல எனத் தன் செய்தியில் கூறியுள்ள பேவ் த வே அமைப்பின் தலைவர் கேரி குரூப் அப்பணியை திருத்தந்தை செவ்வனே நிறைவேற்றித் திரும்பியுள்ளார் எனப் பாராட்டியுள்ளார்.

அண்மை மத்திய கிழக்குத் திருப்பயணத்தின் போது திருத்தந்தை பெற்ற சில எதிர்ப்புக் குரல்கள் கவனிக்கப்பட வேண்டியவை அல்ல, ஏனெனில் அவை எதிர்மறை நோக்கங்களைக் கொண்ட சிலரால் வழங்கப்பட்டவை எனவும் யூதரான குரூப் தன் செய்தியில் கூறியுள்ளார்.










All the contents on this site are copyrighted ©.