தனிமனிதர்கள் மற்றும் சமூகத்தின் ஒன்றிணைந்த வளர்ச்சிக்கு நாகரீக சமூகம் என்பது இன்றியமையாதது,
ஜோர்டன் மதங்களிடையேயான கருத்தரங்கு
மே21,2009. பொறுப்புணர்வுடன்கூடிய சுதந்திரம் குறித்து விவாதிப்பதற்கான மேடையாகச் செயல்படவும்
தனிமனிதர்கள் மற்றும் சமூகத்தின் ஒன்றிணைந்த வளர்ச்சிக்கும் நாகரீக சமூகம் என்பது இன்றியமையாதது
என ஜோர்டனில் நேற்று நிறைவுற்ற மதங்களிடையேயான கருத்தரங்கு அறிவித்துள்ளது.
இவ்வாரம்
திங்கள் முதல் புதன்வரை ஜோர்டன் தலைநகரில் மதமும் நாகரீக சமூகமும் என்ற தலைப்பில் மதங்களிடையேயான
பேச்சுவார்த்தைகளுக்கான திருப்பீட அவையும் மதங்களிடையேயான ஆய்வுக்கான அரச நிறுவனமும்
இணைந்து நடத்திய கூட்டத்தின் இறுதியில் வெளியிடப்பட்ட அறிக்கையில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
அமைதியில்
ஒன்றிணைந்து வாழ்வதை ஊக்குவிக்கும் நோக்கில் வன்முறைகளை வெறுத்து பேச்சுவார்த்தை எனும்
கலாச்சார மற்றும் ஒருவர் மற்றவர் மீதான மதிப்பு போன்ற மதிப்பீடுகளை இளையோருக்குக் கற்பிக்க
வேண்டியதன் அவசியத்தையும் வத்திக்கான் மற்றும் ஜோர்டன் மதத்தலைவர்கள் இணைந்து வெளியிட்ட
அறிக்கை வலியுறுத்துகிறது.
பல்வேறு இன, கலாச்சார மற்றும் சமயப் பன்மைத்தன்மைகள்
மதிக்கப்பட வேண்டியதன் அவசியமும் அவ்வறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது