2009-05-20 18:33:36

வேலையில்லாதவர்களுக்காகப் பரிந்து பேசுகிறார் திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட். 200509 .


தென் அமெரிக்காவின் பெரு நாட்டு ஆயர்கள் வழக்கமான 5 ஆண்டுக்கு ஒரு முறையிலான சந்திப்புக்காக உரோமைக்கு வந்துள்ளனர் . அவர்களை வரவேற்றுப்பேசிய திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட் தேவையில் உள்ளோருக்கு உதவுமாறு பரிந்துரைத்தார் . வேலையில்லாது தவிப்போர் , போதைப் பொருட்களுக்கு அடிமையானோர் , மற்றும் வன்முறைகளால் பாதிக்கப்பட்டோர் பற்றி திருத்தந்தை கவலை வெளியிட்டார் . போதிய கல்வியில்லாதவர்கள் , பெரிய நகரங்களுக்கு வெளியே வாழ்வோர் , ஒதுக்கப்பட்டோர் , இவர்களும் நம் சகோதரர்களே . வலுவற்ற இவர்களை , கடவுள் அன்பு செய்யும் இவர்களை , நாம் புறக்கணிக்கக் கூடாது . கிறிஸ்துவின் அன்பை நினைவில் கொண்டு நாம் உந்தப்படவேண்டும் என்றார் திருத்தந்தை .



கிறிஸ்தவக் குடும்பங்களை சந்திக்குமாறு தெரிவித்தார் . ஆழ்ந்த செபத்தில் ஈடுபட வேண்டும் . மறையுரை ஆற்றுவதற்கு நல்லமுறையில் தயாரிக்க வேண்டும் . குருக்களுக்கும் , இல்லறவாசிகளுக்கும் , இளைஞர்களுக்கும் மறைப்பணி ஆற்றுவோர்க்கும் தகுந்த கவனத்தைக் கொடுப்பது புதிய மறைபரப்புப் பணியின் இலக்காக இருக்கவேண்டும் என பெரு நாட்டு ஆயர்களுக்கு திருத்தந்தை அறிவுரை வழங்கினார் .



ஆண்டவரோடு ஒவ்வொரு கிறிஸ்தவரும் நெருக்கமான உறவு கொண்டு விவிலியம் காட்டும் வழிமுறையில் வாழ வழி செய்ய வேண்டும் எனத் திருத்தந்தை ஆயர்களைக் கேட்டுக்கொண்டார் .








All the contents on this site are copyrighted ©.