2009-05-15 14:43:45

கிறிஸ்தவத் தலைவர்களும் கிறிஸ்தவச் சமூகங்களும் தாங்கள் அறிவிக்கும் விசுவாசத்திற்கு உயிருள்ள சான்றுகளாக இருக்க வேண்டும், திருத்தந்தை


மே15.2009. திருத்தந்தையர்களுக்கும் கிறிஸ்தவ ஒன்றிப்பு பிதாப்பிதாக்களுக்கும் இடையே இடம் பெறும் சந்திப்புக்களானது மிகவும் அடையாளப்பூர்வமான முக்கியத்துவம் பெற்றவை. இன்றைய இச்சந்திப்பு, கத்தோலிக்கத் திருச்சபைக்கும் ஆர்த்தோடாக்ஸ் சபைகளுக்கும் இடையேயான இறையியல் உரையாடல் பணிக்கு புதிய உந்துதல் அளிக்கும். கிறிஸ்தவத் தலைவர்களும் கிறிஸ்தவச் சமூகங்களும் தாங்கள் அறிவிக்கும் விசுவாசத்திற்கு உயிருள்ள சான்றுகளாக இருக்க வேண்டும். எருசலேமில் வாழும் கிறிஸ்தவர்களின் ஏக்கங்கள் புரிந்து கொள்ளப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும், குறிப்பாக இளையோருக்குக் கல்வியும் வேலை வாய்ப்பும் தரமான வீட்டு வசதியும் நிலையான பொருளாதாரமும் தடையின்றி வழங்கப்பட வேண்டும் என விரும்புகிறேன். நம்மை ஏமாற்றாத கிறிஸ்துவின் நம்பிக்கையால் நீங்கள் அனைவரும் உறுதிப்படுத்தப்படுவீர்களாக என்று சொல்லி இவ்வுரையை முடித்தார் திருத்தந்தை.








All the contents on this site are copyrighted ©.