2009-05-15 14:42:20

இந்தப் புனித நிலங்களில் வாழும் அனைத்து மக்களின் இதயங்களில் கடவுளின் திருவருளால் நம்பிக்கை என்றும் புதிதாகப் பிறக்கட்டும், திருத்தந்தை


மே15,2009. இந்த புனித இடத்தில் கிறிஸ்து இறந்து உயிர்த்தார். மீண்டும் ஒருபொழுதும் இறக்கமாட்டார். இங்கு மனித வரலாறு அறுதியாக மாறியது. தீமைக்கு இறுதி சொல் ஒருபொழுதும் கிடையாது. அன்பு, மரணத்தைவிட வலிமை வாய்ந்த்து. நமது எதிர்காலம் விசுவாசமும் பராமரிப்பும் கொண்ட இறைவனின் கையில் உள்ளது என்பதை இந்த இடத்தில் கிறிஸ்து நமக்குக் கற்றுத் தந்துள்ளார். காலியான கல்லறைவாழ்வின் ஆவியின் கொடையாகிய நம்பிக்கை பற்றிப் பேசுகின்றது. புனிதபூமிக்கான எனது திருப்பயணத்தின் நிறைவில் இச்செய்தியையே விட்டுச் செல்ல விரும்புகிறேன். இந்தப் புனித நிலங்களில் வாழும் அனைத்து மக்களின் இதயங்களில் கடவுளின் திருவருளால் நம்பிக்கை என்றும் புதிதாகப் பிறக்கட்டும். இது உங்கள் இதயங்களில், குடும்பங்களில், சமூகங்களில் குடிகொண்டிருக்கட்டும். அமைதியின் இளவரசருக்கு இன்னும் அதிக விசுவாசமான சான்றுகளாக இருக்க உங்கள் ஒவ்வொருவரையும் இது தூண்டட்டும் என்ற திருத்தந்தை, மேலும் தொடர்ந்தார்.

கொல்கொத்தாவின் இருளான பேருண்மையை அடிக்கடி அனுபவித்துள்ள புனிதபூமியிலுள்ள திருச்சபை, இந்தக் காலியான கல்லறை அறிவிக்கும் சுடர்விடும் நம்பிக்கை செய்தியை அறிவிப்பதில் ஒருபோதும் தளரக் கூடாது. கடவுள் எல்லாவற்றையும் புதியனவாக்குகின்றார். வரலாறு மீண்டும் திரும்ப வேண்டுமென்ற அவசியம் இல்லை. நினைவுகள் குணப்படுத்தப்பட முடியும், அதன்மூலம் எதிர்க்குற்றச்சாட்டு மற்றும் வெறுப்பின் கசப்பான கனிகள் மேற்கொள்ளப்படும், நீதி, அமைதி வளமை மற்றும் ஒத்துழைப்பு ஒவ்வொருவருக்கும், உலக மீட்பரின் இதயத்துக்கு மிகவும் பிடித்த இங்கு வாழும் மக்களுக்குச் சிறப்பான வழியில் கிடைக்கும். ஏன் இப்பொழுதுகூட உயிர்ப்பின் அருள் நம்மில் செயல்படுகின்றது. இந்த மறையுண்மை, மனமாற்றம், தபம், செபம் ஆகியவை வழியாக தூயஆவியின் வாழ்வில் நாம் வளர உதவட்டும். இது, உடலினால் பிறக்கும் போராட்டங்களை மேற்கொள்ள உதவட்டும். இந்த எருசலேம், கலிலி மற்றும் இதற்கு அப்பாற்பட்ட இடங்களின் வீதிகளில் கிறிஸ்துவின் மன்னிப்பு மற்றும் புதிய வாழ்வுக்கான செய்தியை தினமும் அறிவிப்பதற்கான நமது பாதையைத் தொடருவதற்கு நமது அனைத்துப் பயங்களையும் பதட்டங்களையும் மீட்பரின் காலியான கல்லறையில் புதைக்க அழைக்கப்படுகிறார்கள் என்ற திருத்தந்தை, இறுதியில், புனிதபூமியிலுள்ள அன்பான திருச்சபையில் பணியாற்றும் தனது சகோதர ஆயர்கள் மற்றும் குருக்களுக்கு ஊக்கமூட்டும் வார்த்தைகளைக் கூறினார். இந்த அமைதியின் நகரில் வாழும் அனைவரும் ஒற்றுமை மற்றும் அமைதியின் சாட்சிகளாக வாழ இயேசு அழைக்கிறார். அவர் உங்கள் சோதனைகளில் உங்களைத் தாங்கிப் பிடிப்பாராக. உங்கள் வேதனைகளில் உங்களுக்கு ஆறுதல் அளிப்பாராக. இறையரசை அறிவிப்பதற்குும் அதனைப் பரவச் செய்வதற்குமான உங்கள் முயற்சிகளில் உறுதிப்படுத்துவாராக என்று சொல்லி அனைவருக்கும் தமது ஆசீரை வழங்கி இவ்வுரையை நிறைவு செய்தார் திருத்தந்தை.








All the contents on this site are copyrighted ©.