2009-05-14 12:36:38

அமைதிக்கு வழி என்ற சமூக சேவை அமைப்பு திருச்சபையின் சமூகக் கொள்கைத் திரட்டுப்பற்றி உரோமையில் கருத்தரங்கு நடத்துகிறது .140509 .


ஐக்கிய நாடுகள் சபையின் நிரந்தர உறுப்பினர் பேராயர் செலஸ்தீனோ மிலியோரே இந்த அமைதிக்கு வழி என்ற அமைப்பின் தலைவர் . இந்த அமைப்பு இந்த மே மாதம் 16 தேதியிலிருந்து 21 தேதி வரை கத்தோலிக்கத் திருச்சபையின் சமூகக் கோட்பாடுகள் பற்றிய கருத்தரங்கை உரோமையில் நடத்துகிறது . அக்கருத்தரங்கின் மையக்கருத்து பண்படுத்திக் காத்திடுக என்பதாகும் . நீதியுள்ள உலகிற்கு பணியாளர்களாக இருப்பதாகும் .

ஒவ்வொரு ஆண்டும் 50 கல்லூரி மாணவர்கள் இத்தாலியிலிருந்து இக்கருத்தரங்கில் பங்கேற்பார்கள் . ஒவ்வொரு கல்லூரியும் 2 மாணவர்களை அனுப்புவர் . அவர்கள் அரசுத் தூதர்கள் , ஐ.நா . அலுவலர்கள் ,மற்றும் பல்வேறு தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த உறுப்பினர்களின் உரைகளையும் கேட்கும் வாய்ப்பு உள்ளது . பொதுநலச் சேவையில் திருச்சபை ஆற்றும் பணியில் இளைஞர்களின் விலைமதிப்பில்லாத ஆர்வத்தையும் பங்கையும் ஊக்குவிப்பதற்காக இந்தக் கருத்தரங்கு நடத்தப்படுகிறது .








All the contents on this site are copyrighted ©.