2009-05-13 20:08:59

ஜோசப்பாட் பள்ளத்தாக்கில் மறையுரை .120509


கிறிஸ்து உயிர்த்தெழுந்தார் , அல்லேலூயா .... இந்த வார்த்தைகளோடு நிறைந்த பாசத்தோடு நான் உங்களுக்கு வாழ்த்துக் கூறுகிறேன் . பிதாப்பிதா போட்வால் அளித்த வரவேற்புக்கு நன்றி கூறுகிறேன் . எருசலேம் திருச்சபையோடு

திருப்பலி நிறைவேற்றுவதில் மிக்க மகிழ்ச்சி கொள்கிறேன் .



நாம் ஒலிவ மலையில் இயேசு செபித்த , துன்புற்ற , எருசலேத்துக்காக அழுத இடத்தில் இருக்கிறோம் . இங்குதான் அவர் விண்ணெழுந்து செல்லும் முன் தம் சீடர்களுக்கும் நமக்கும் தமது சமாதானத்தை வழங்கினார் .





தூய பேதுருவின் வழித்தோன்றலாகிய நான் வரலாற்றின் அடிச்சுவடிகளில் நடந்து வந்துள்ளேன் . கிறிஸ்து உயிர்த்து எழுந்துவிட்டார் என அறிவிக்கவும் , இறைமக்களை விசுவாசத்தில் உறுதிப்படுத்தவும் வந்துள்ளேன் . தூய ஆவியானவர் உங்களுக்குத் தம் ஆறுதலை அளிக்குமாறு செபிக்க வந்துள்ளேன் . இங்கு நடக்கும் மோதல் காரணமாக நீங்கள் படும் துன்பங்களை அறிவேன் .நான் இங்கு வந்துள்ளது நான் உங்களை மறக்கவில்லை என்பதை வெளிப்படுத்தும் என நம்புகிறேன் . நம்பிக்கையை இழக்காது நீங்கள் எருசலேத்தில் தங்கி கிறிஸ்துவுக்குச் சாட்சியாக இருப்பது கடவுளின் பார்வையில் விலையுயர்ந்ததாக உள்ளது . இந்த புனித பூமியின் வருங்கால ஒருமைப்பாட்டுக்கு நீங்கள் இங்கிருப்பது இன்றியமையாதது என்றார் .



திருத்தூதர் பவுல் கூறியதுபோல உங்கள் எண்ணங்களை மேலிருப்பவைகளில் பதியுங்கள் என்பதை மனத்தில் நிறுத்துங்கள் .தூய பவுல் அடிகளார் கூறும்படி நம்முடைய நம்பிக்கையின் கனவுகள் மேலிருக்கும் எருசலேத்தில் நிறைவுறும் . கடவுள் ஒவ்வொருவர் கண்களின் கண்ணீரையும் துடைத்துவிடுவார் எனக்கூறினார் .



இங்கிருக்கும் மதில்களுக்குள்ளே மூன்று மாபெரும் சமயங்கள் இருக்கின்றன .யூதர்கள் , கிறிஸ்தவர்கள் , இஸ்லாமியர் இரக்கமுள்ள கடவுளை நம்புகிறார்கள் . இந் நம்பிக்கையைக் கொண்டுள்ள இங்கு ஒப்புரவும் சமாதானமும் வளரவேண்டும் .



வருத்தம் தரக்கூடிய முறையில் அண்மைக்காலத்தில் பல கிறிஸ்தவர்கள் வாழமுடியாத நிலையில் இங்கிருந்து வெளியேறி விட்டார்கள் . புனித பூமியில் எல்லோருக்கும் வாழ இடம் உள்ளது . இதனை அரசு அதிகாரிகள் மதித்து கிறிஸ்தவர்களுக்குப் பாதுகாப்புக் கொடுக்கவேண்டும் . நானும் உலகெங்கும் இருக்கும் திருச்சபையும் உங்களுக்குத் துணையாக இருப்போம் எனத் திருத்தந்தை பாசத்தோடு கூறினார் .



கிறிஸ்து வாழ்ந்து புனிதப்படுத்திய இங்கு நீங்கள் நம்பிக்கையோடு வாழுமாறு வேண்டுகிறேன் . இயேசு உயிர்த்தபோது கல்லறையை மூடிய கல் அகன்றதைப்போல நம் மனத்தில் விசுவாச்திற்குத் தடையாக இருக்கும் கல் அகலட்டும் .வாழ்வில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையை வளர்ப்போம் . கிறிஸ்து உயிர்த்துவிட்டார் . உண்மையாகவே உயிர்த்துவிட்டார் . அல்லேலூயா எனக்கூறி திருத்தந்தை தமது மறையுரையை முடித்தார் .








All the contents on this site are copyrighted ©.