2009-05-13 14:04:41

ஐ.நா.வின் 700 கோடி புதிய மரங்கள் நடும் திட்டம்


மே13,2009. வருகிற டிசம்பரில் கோப்பன்ஹாகெனில் இடம் பெறவுள்ள உலக வெப்பநிலை மாற்றம் குறித்த ஒப்பந்தத்தை அரசுகள் ஏற்க வேண்டுமென்பதை ஊக்குவிக்கும் விதமாக புதிய மரங்கள் நடும் திட்டத்தை அறிவித்துள்ளது ஐ.நா.நிறுவனம்.

இவ்வாண்டு முடிவதற்குள் 700 கோடி மரங்கள் நடும் தனது திட்டத்திற்கு நாடுகள் ஆதரவு அளிக்குமாறு கேட்டுள்ளது ஐ.நா. சுற்றுச்சூழல் அமைப்பு.

வருகிற ஜூன் 5ம் தேதி கடைபிடிக்கப்படும் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு இம்முயற்சியை எடுத்துள்ள இவ்வமைப்பு, இதுவரை 166 நாடுகளில் சுமார் 310கோடி மரங்கள் நடப்பட்டுள்ளதாக அறிவித்தது.

உலகின் பாதி நாடுகள் உலக சுற்றுச்சூழல் தினத்திற்குள் ஒருமரத்தை நடுமாறு ம் கேட்டுள்ள ஐ.நா. சுற்றுச்சூழல் அமைப்பு, இன்னும் 200 க்கும் குறைவான நாட்களில் வெப்பநிலை மாற்றத்தை நிறுத்தும் தேவையை உலகிற்கு உணர்த்தவும் திட்டமிட்டுள்ளதாக அதன் இயக்குனர் ஆச்சிம் ஸ்டெய்யினர் கூறினார்







All the contents on this site are copyrighted ©.