இலங்கையில் போரினால் புலம் பெயர்நதுள்ள மக்களுக்கு மறுவாழ்வு வழங்கப்பட ஆயர்கள் வலியுறுத்தல்
மே13,2009. இலங்கையில் போரினால் புலம் பெயர்நதுள்ள மக்களுக்கு மறுவாழ்வு வழங்குமாறு அரசுத்தலைவர்
மகிந்த ராஜபக்ஷேயை வலியுறுத்தியுள்ளனர் அந்நாட்டு கத்தோலிக்க ஆயர்கள்.
கொழும்பு
பேராயர் ஆஸ்வால்டு கோமிஸ் தலைமையில் அரசுத்தலைவரை இத்திங்களன்று சந்தித்த ஆயர்கள் மற்றும்
காரித்தாஸ் பிரதிநிதிகள் குழு இக்கோரிக்கையை முன்வைத்தது.
மேலும், இலங்கை அரசுத்தலைவரும்,
தற்போது வடக்கில் முகாம்களில் வாழ்ந்து வரும் போர் அகதிகள் தங்கள் சொந்த வீடுகளுக்குச்
செல்வதற்கு வழி அமைத்துக் கொடுக்கப்படுவார்கள் என்ற உறுதியை இக்குழுவிடம் வழங்கியிருப்பதாக
யூக்கா செய்தி நிறுவனம் கூறியது.
மன்னார், கிளிநொச்சி, முல்லைத் தீவு ஆகிய பகுதிகளைச்
சேர்ந்த ஏறத்தாழ இரண்டு இலட்சம் அகதிகள் முகாம்களில் இருப்பதாக ஊடகங்கள் கூறுகின்றன.