2009-05-13 14:00:18

இலங்கை மோதல்கள் சிறார்கள் மீது ஏற்படுத்தி வரும் தாக்கத்தைக் கண்டு ஐ.நா. அதிகாரிகள் கவலை


மே13,2009. இலங்கையில் தொடர்ந்து இடம் பெறும் கடும் மோதல்கள் சிறார்கள் மீது ஏற்படுத்தி வரும் தாக்கத்தைக் கண்டு மிகவும் கவலை தெரிவித்துள்ளனர் ஐ.நா. அதிகாரிகள்.

மிகவும் நலிந்த இச்சிறாருக்குப் பாதுகாப்பு வழங்குமாறு அரசையும் தமிழ்ப் போராளிகளையும் கேட்டுள்ளது யூனிசெப் என்ற ஐ.நா.வின் சிறார் நலஅமைப்பு.

மேலும், இந்த மோதல்களால் பாதிக்கப்பட்ட சிறார்களின் நிலைமைகளை கணிப்பதற்காக தங்களின் சிறப்பு பிரதிநிதி ஒருவரை இலங்கைக்குள் அனுமதிக்க வேண்டும் என்று இலங்கை அரசிடம் தான் பேச்சு வார்த்தைகள் நடத்தி வருவதாக, ஆயுத மோதல்களில் சிக்கியுள்ள சிறார்களின் நலன்களுக்கான ஐ.நா பொதுச் செயலரின் சிறப்புப் பிரதிநிதியான ராதிகா குமாரசாமி தெரிவித்துள்ளார்.

மோதல் பகுதியில் இன்னமும் சுமார் ஐம்பதாயிரம் பேர் சிக்கியிருக்கிறார்கள் என்னும் போது, அவர்களில் சரிபாதி அதாவது 25,000 பேர் வரை சிறார்களாக இருக்கலாம் என்று தாங்கள் மதிப்பிடுவதாகவும் அவர் கூறினார்

இன்னும், இலங்கையின் வடக்கில் போர் முனையில் இலங்கை அரசுப் படையினர் தொடர்ந்து கனரக ஆயுதங்களை பயன்படுத்தி வருவதாக ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமானப் பணிகளுக்கான இணைப்பாளர் ஜோன் ஹோல்ம்ஸ் தெரிவித்துள்ளார்.








All the contents on this site are copyrighted ©.