2009-05-12 18:41:13

எருசலேத்தின் நோட்டர்டாம் ஆப் பிரான்ஸ் மையம் . 110509 .


யாத் வாசெத்திலிருநது 10 கிலோமீட்டர் தொலைவிலுள்ள நோட்டர் டாம் எருசலேம் மையத்துக்குச் சென்றார் திருத்தந்தை . இந்த இடம் புனித நகருக்கு அடுத்து உள்ளது . 1882 ஆம் ஆண்டிலிருந்து பிரெஞ்சு நாட்டு அசெம்பனிஸ்ட் என்ற துறவியர் வழி நடத்தலால் திருப்பயணிகள் புனித பூமிக்குப் பெருமளவில் வரத் தொடங்கினர் . எனவே பிரெஞ்ச் மக்களின் ஆதரவோடு அங்கு தங்குமிடம் அமைக்கப்பட்டது . அதற்கு நோட்டர் டாம் தி பிரான்ஸ் எனப் பெயர் சூட்டினர் . போரால் பாதிக்கப்பட்ட அந்த இடத்தை முந்நாள் திருத்தந்தை 6 ஆம் பால் விரிவு படுத்திப் புதிதாகக் கட்டி எழுப்பினார் . முந்நாள் திருத்தந்தை 2 ஆம் ஜான் பால் இந்த திருப்பயயணியர் தங்கும் மையத்தை லீஜினரிஸ் ஆப் கிரைஸ்ட் என்ற கிறிஸ்துவின் நாமம் கொண்ட சபையினர் வசம் ஒப்படைத்தார் . ஆன்மீக வளர்ச்சிக்கு வழிவகுக்கும் அதை அன்னை மரியாள் உலக அமைதியின் இராக்கினியின் பாதுகாவலில் அடைக்கலமாக்கியுள்ளார் . சமய கலந்துரையாடலுக்கு அவ்விடம் பயன்படுத்தப்பட்டு வருகிறது .



அங்கு எருசலேத்தின் இலத்தீன் ரீதி பிதாப்பிதா திருத்தந்தையை வரவேற்றார் .







All the contents on this site are copyrighted ©.