2009-05-11 14:50:54

வரலாற்றில் மே 12


4ம் நூற்றாண்டு புனிதர்கள் பங்கிராஸ், நெரேயுஸ், அக்கிலேயுஸ் விழா. உரோமைப் பேரரசன் தியோக்கிளேசியன் கிறிஸ்தவர்களை ஒடுக்கிய காலத்தில், 14 வயது சிறுவனான பங்கிராஸ் சித்ரவதைக்கு உட்பட்டு தலை துண்டிக்கப்பட்டு இறந்தார். படைவீரர்களாகப் பணியாற்றிய நெரேயுசும் அக்கிலேயுசும் டெராசீனா தீவுக்குக் கொண்டு போகப்பட்டு கொல்லப்பட்டனர்.

மே 12, உலக தாதியர் தினம்

இதே நாள், 1364ல் போலந்தின் பழமையான Jagiellonian பல்கலைக்கழகம் கிராக்கோவில் நிறுவப்பட்டது.

1003இல் திருத்தந்தை இரண்டாம் சில்வெஸ்டரும்,

1012ல் திருத்தந்தை நான்காம் செர்ஜியுசும் இறந்தனர்.

1820 - நவீன தாதியியல் முறையை உருவாக்கிய இங்கிலாந்துத் தாதி புளோரன்ஸ் நைட்டிங்கேல் பிறந்தார்.

1881 - வட ஆபிரிக்காவில் டுனீசியா, பிரான்சின் நேரடி ஆட்சியின் கீழ் வந்தது.

1952 - காஜ் சிங்க், ஜோத்பூரின் மன்னனாக முடி சூடினார்.

2008- சீனாவின் சிகுவானில் ஏற்பட்ட நிலஅதிர்ச்சியில் 69 ஆயிரத்துக்கு அதிகமானோர் இறந்தனர்.








All the contents on this site are copyrighted ©.