2009-05-11 18:20:11

திருத்தந்தை ஜோர்டானிலிருந்து பிரியாவிடை . 110509 .


ஜோர்டான் நாட்டில் தமது திருப்பயணத்தை முடித்துக்கொண்டு பிரியாவிடை பெற்றுக்கொண்டார் திருத்தந்தை . அவருக்கு இராணுவ அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது . அதன் பின்னர் ஜோர்டான் மன்னர் இரண்டாவது அப்துல்லா பிரியாவிடை செய்தி வழங்கினார் . அதுபோது திருத்தந்தையின் வருகை நல்லுறவுகளுக்குப் பாலமாகவும் , மக்களின் குறை நீக்கி நீதியுள்ள சமுதாயத்தை அமைக்க பெரிதும் துணையாக இருக்கும் எனவும் கூறி தம் நாட்டின் சார்பாகத் திருத்தந்தையின் வருகைக்கு நன்றி தெரிவித்தார் .



அதுபோது உரை வழங்கிய திருத்தந்தை , விவிலியத்தில் காணப்படும் நாடுகளில் அடுத்த நாட்டுக்குப் பயணம் மேற்கொள்ளவிருப்பதாகத் தெரிவித்தார் . ஜோர்டான் நாட்டில் பெற்ற பாசமிகு வரவேற்புக்கு நன்றி தெரிவித்தார் திருத்தந்தை . மன்னர் 2 ஆவது அப்துல்லா ஹாஷேமைட் நாட்டுக்கு வர அழைப்பு விடுத்ததற்கும் , அவருடைய விருந்து உபசரிப்புக்கும் , அவருடைய பாசமிகு நல் வார்த்தைகளுக்கும் நன்றி தெரிவித்தார் திருத்தந்தை . பல்வேறு நல்லுள்ளங்கள் திருத்தந்தையின் வருகைக்காக மிகச் சிறப்பாகத் தயாரித்திருந்ததாகத் தெரிவித்தார் திருத்தந்தை . நேரில் வர இயலாதவர்கள் வானொலி மற்றும் தொலைக்காட்சி வழி நிகழ்ந்தவைகளை வீடுகளிலிருந்தே ரசித்திருப்பார்கள் எனக்கூறி அவர்களுக்கும் தம் வாழ்த்தைத் தெரிவித்தார் திருத்தந்தை .





ஜோர்டான் நாட்டுக்குத் தாம் ஒரு திருப்பயணியாக வந்ததாகத் தெரிவித்த திருத்தந்தை ஜோர்டானில் பெற்ற அனுபவங்கள் எந்நாளும் மறவாது நெஞ்சில் நிறைந்திருக்கும் எனத் தெரிவித்தார் .



மீண்டும் நன்றி கூறி , பிரியாத விடைபெற்ற திருத்தந்தை ஹாஷேமைட் அரசின் அனைத்து மக்களையும் நெஞ்சில் கொண்டுள்ளதாகவும் , நாட்டு மக்கள் அனைவரும் அமைதியையும் , வளப்பத்தையும் இப்போதும் எப்போதும் பெற்று மகிழுமாறும் கூறி இறை ஆசியை வழங்கி விடை பெற்றுக் கொண்டார் .








All the contents on this site are copyrighted ©.