2009-05-11 08:11:37

ஜோர்டனில் திருத்தந்தையின் இறுதி நாள் நடவடிக்கைகள்.


திருதந்தையின் மத்திய கிழக்குப் பகுதிக்கான முதல் பொதுத்திருப்பலி இஞ்ஞாயிறன்று காலை ஜோர்டன் தலைநகர் அம்மனின் சர்வதேச விளையாட்டரங்கில் இடம்பெற்றது. 25 ஆயிரம் பேர் உட்கார்ந்து பார்க்கக்கூடிய வசதியுடைய இம்மைதானத்தில் திருத்தந்தை நிறைவேற்றியத் திருப்பலியில் ஏறத்தாழ 30 ஆயிரம் பேர் கலந்துக் கொண்டனர்.

திருப்பலியின் இறுதியில் மக்களுக்கு அல்லேலூயாவாழ்த்தொலி உரையும் வழங்கினார் திருத்தந்தை.

பிற்பகலில் பெத்தானி நகருக்கு அருகே யோர்தானில், இயேசு அருளப்பரிடமிருந்து திருமுழுக்குப் பெற்ற இடத்தைத் தரிசிக்கச் சென்றார் பாப்பிறை. Wadi Al-Kharràr என்றழைக்கப்படும் இந்த பெத்தானியப் பகுதி மத்தியத்தரைக்கடல் மட்டத்திற்கு 350 மீட்டர் தாழ்வாக உள்ளது. யோர்தான் நதி சாக்கடலில் சேரும் இடத்திற்கு சில கிலோ மீட்டர்கள் தூரத்திலேயே உள்ளது. இக்கடல்(ஏரி) தான் பழைய ஏற்பாட்டில் உப்புக்கடல் எனவும் அரபுக்கையெழுத்துப் பிரதிகளில் லோத் கடல் எனவும் அழைக்கப்படுகிறது.

இந்த பெத்தானியப் பகுதியில் லத்தீன் ம்ற்றும் கிரேக்க மெல்கிதே ரீதிகளின் கொவில்களுக்கான அடிக்கற்களை ஆசீர்வதித்தார் திருத்தந்தை.

விசுவாசிகளுக்கான அம்மன் விளயாட்டரங்கு திருப்பலியும், யோர்தான் நதிக்கரையின் இரு கொவில் அடிக்கல் நாட்டு விழாக்களும் திருத்தந்தை ஞாயிறன்று கலந்து கொண்ட இரு நிகழ்வுகள்.








All the contents on this site are copyrighted ©.