2009-05-08 17:24:41

புனலூரின் புதிய ஆயர் .080509 .


புனலூரின் புதிய ஆயர் .080509 .



இந்தியாவின் புனலூர் மறைமாவட்ட ஆயராக மேதகு சில்வெஸ்டர் பொன்னுமுத்தன் அவர்களை திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட் இம்மேமாதம் 8 ஆம் தேதி நியமித்துள்ளார் . இதற்கு முன்னர் அவர் கார்மேல்கிரியில் உள்ள புனித சூசையப்பர் திருப்பீட குருகுலத்தின் தலைவராக இருந்துவந்தார் . இவர் கேரளத்தின் நெய்யாத்தின்காரா மறைமாவட்டத்தில் விராலி உச்சக்காடாவில் ஆகஸ்ட்மாதம் 10 ஆம் தேதி 1956 ல் பிறந்தவர் . டிசம்பர் 19 , 1981 ல் குருப்பட்டம் பெற்றுள்ளார் . நெய்யாத்தின்காரா மறைமாவட்டக் குரு .



புனலூர் மறைமாவட்டத்தில் 46 ஆயிரம் கத்தோலிக்கர்கள் உள்ளனர் . 54 குருக்களும் 246 துறவியரும் உள்ளனர் .



புனலூரின் முதல் ஆயர் மேதகு காப்பில். 1985 ல் இந்த மறைமாவட்டம் உருவாக்கப்பட்டது . புனலூர் மறைமாவட்டம் ஆலப்புழா , கொல்லம் , பதனம் தீத்தா ஆகிய அரசு மாவட்டங்களை உள்ளடக்கியது .








All the contents on this site are copyrighted ©.