2009-05-08 17:27:13

கொச்சின் மறைமாவட்டத்தின் புதிய ஆயர் – 080509 .


இந்தியாவின் கொச்சின் மறைமாவட்டத்தின் புதிய ஆயராக மேதகு ஜோசப் கரியில் அவர்களை திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட் இம்மேமாதம் 8 ஆம் தேதி நியமித்துள்ளார் . இவர் புனலூரிலிருந்து கொச்சினுக்கு மாற்றலாகிச் செல்கிறார் .



கொச்சின் மறைமாவட்டம் 1500 ஆம் ஆண்டுகளிலிருந்து போர்த்துக்கீசியரின் மறைப்பணித்தளமாக இருந்து வந்துள்ளது . 1542 ல் அங்கு இயேசு சபையினர் பணிசெய்திருக்கின்றனர் . அம்மறைமாவட்டம் உரோமன் லத்தீன் ரீதியைச் சேர்ந்தது . கொச்சினில் உள்ள பிரான்சிஸ்கன் ஆலயத்தில் தூய பிரான்சிஸ் சவேரியார் பலமுறை திருப்பலி நிகழ்த்தியிருக்கிறார் . அந்த ஆலயத்தில்தான் வாஸ்கோடகாமா 1524 நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளார் . . மேதகு ஜான் தட்டும்கல் 2000 ஆம் ஆண்டிலிருந்து கொச்சின் ஆயராக இருந்து வந்துள்ளார் .








All the contents on this site are copyrighted ©.