2009-05-08 17:30:40

உலகக் காரித்தாஸ் தலைவரின் பொருளாதார ஆய்வு – 080509 .


அகில உலகப் பொருளாதாரத்தைப் பற்றிய ஆய்வைத் தெரிவிக்கிறார் அகில உலகக் காரித்தாஸ் தலைவர் .

வத்திக்கான் திருப்பீடத்துக்கான ஐரோப்பாவின் தூதுவர்கள் பலருக்கு உரை வழங்கினார் அகில உலகக் காரத்தாஸ் நிறுவனத் தலைவர் கர்தினால் ஆஸ்கர் ரொட்ரீகுவஸ் மாராடீகா . வளரும் நாடுகளுக்கு செல்வம் மிக்க நாடுகள் உதவவேண்டும் என் அதுபோது வலியுறுத்தினார் . பொருளாதாரப் பின்னடைவால் ஏழை நாடுகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார் . பல ஆண்டுகளாகப் பொருளாதார ஏற்றத் தாழ்வால் பாதிக்கப்பட்ட ஏழைமக்கள் தற்போது மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார் . 2009 ல் பல கோடி மக்கள் வறுமை நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக வருத்தம் தெரிவித்தார் . 2009 லிருந்து 2015 க்குள் வறுமை காரணமாக பல இலட்சம் குழந்தைகள் இறக்கநேரிடும் என மேலும் தெரிவித்துள்ளார் . பேராசையில் இருந்து விடுபட்டு மனித மாண்பைக் காக்கவும் ,நீதியுடன் நடக்கவும் வேண்டும் எனக் கர்தினால் மாராடீகா வலியுறுத்தினார் .








All the contents on this site are copyrighted ©.