2009-05-07 17:56:38

மருத்துவர்கள் வாழ்வைப்போற்ற வேண்டும் , திருத்தந்தை. 070509 .


மருத்துவர்களை வாழ்வுக்காக பணி செய்யுமாறு அறிவுறுத்துகிறார் திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட் . நல்ல மதிப்பீடுகளைக் கொண்ட வாழ்வு கடவுளின் ஞானத்தையும் அன்பையும் காட்டுகிறது . எனவே எல்லா மருத்துவர்களும் வாழ்வைப் போற்றவேண்டும் எனத் திருத்தந்தை தெரிவித்தார் . சென்ற புதன் மறைபோதகத்தின் இறுதியில் அங்கு வந்திருந்த ஏராளமான இத்தாலிய மருத்துவர்களுக்கு திருத்தந்தை உரை வழங்கினார் . அதுபோது வாழ்வைப் பாதுகாப்பது மனிதாபிமான , மற்றும் கிறிஸ்தவ ஒற்றுமைக்குச் சிறந்த சாட்சியம் என வருணித்தார் . மருத்துவர்கள் அவர்களுடைய திறமைகளை மனுக்குலத்துக்கு மக்களின் பிறப்பிலிருந்து வாழ்வின் இறுதிவரை அவர்களுக்குச் சேவை செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட் .








All the contents on this site are copyrighted ©.