2009-05-07 17:55:20

திருத்தந்தையின் புனித பூமித் திருப்பயணம் .070509 .


இந்த வெள்ளிக்கிழமை புனித பூமிக்குத் திருப்பயணம் மேற்கொள்கிறார் திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட் . இஸ்ராயேல் மற்றும் புனிதபூமிக்கும் இத்தாலிக்கும் கால நேரம் 1 மணி அளவு வேறுபடுகிறது . புனித பூமியின் நேரம் 1 மணி நேரம் முன்னதாக உள்ளது . இந்தியா உரோம் நகரைவிட 3.30 மணி நேரம் முன்னதாக இருக்கிறது .

வெள்ளி காலை உரோம் நேரம் 9.30 மணிக்கு திருத்தந்தை இங்குள்ள பியூமிச்சீனோ விமான நிலையத்திலிருந்து மகாராணி அலியா என்ற விமானத்தில் அம்மான் செல்கிறார் . அங்கு பல இடங்களுக்கும் செல்லும் திருத்தந்தை திங்கள் அன்று எருசலேம் செல்கிறார் . புதனன்று பெத்லகேம் செல்கிறார் .வியாழன்று நாசரேத்துக்குச் செல்கிறார் . அடுத்த வெள்ளியன்று எருசலேத்திலிருந்து டெல்அவிவ் சென்று , அங்கிருந்து நண்பகல் 1 மணிக்குக் கிளம்பி அன்று மாலை 4.50 மணிக்கு உரோம் நகரின் சாம்பீனோ விமானதளத்தில் வந்து சேர்வார் .








All the contents on this site are copyrighted ©.