2009-05-06 14:59:28

ஜோர்டன் மற்றும் இஸ்ரேலுக்குத் தான் ஓர் அமைதியின் திருப்பயணியாக வரவுள்ளேன், திருத்தந்தை


மே06,2009. புதன் மறைபோதகத்தின் இறுதியில் தான் திருப்பயணம் மேற்கொள்ளவுள்ள ஜோர்டன் மற்றும் இஸ்ரேல் மக்களுக்குத் தனது சிறப்பு செய்தி ஒன்றையும் அளித்தார் திருத்தந்தை. நான் இம்மக்களோடு இருக்கவும் அவர்களின் ஏக்கங்கள்,எதிர்பார்ப்புகள் துன்பங்கள் மற்றும் வாழ்வுப் போராட்டங்களில் பங்கு பெறவும் வுரும்புகிறேன் என்ற திருத்தந்தை, தான் ஓர் அமைதியின் திருப்பயணியாக வரவுள்ளதாகவும் தெரிவித்தார். RealAudioMP3

இத்திருப்பயணத்தின் முதல் நோக்கம் இயேசு வாழ்ந்து புனிதப்படுத்திய இடங்களைப் பார்வையிட்டு புனிதபூமியிலும் மத்திய கிழக்குப் பகுதியிலும் வாழும் மக்களுக்காக அமைதி மற்றும் ஒற்றுமை எனும் கொடைக்காகச் செபிப்பதாகும். இவ்வெள்ளியிலிருந்து துவங்கும் ஒருவாரப் பயணத்தில் இசுலாமிய மற்றும் யூதசமூகப் பிரதிநிதிகளைச் சந்திப்பதும் இடம் பெறுகிறது. புனிதபூமியில் வாழும் மக்களின் ஆன்மீக மற்றும் சமூக வாழ்வுக்கான நற்கனிகளை இத்திருப்பயணம் கொணர வேண்டுமென செபிக்குமாறு கத்தோலிக்கரை வேண்டி எனது வாழ்த்துக்களையும் தெரிவிக்கிறேன். கடவுளின் நன்மைத்தனத்திறாகாக அவரைப் புகழ்வோம். நாம் அனைவரும் நம்பிக்கையின் மனிதர்களாக இருப்போம். அமைதிக்கான ஆவல் மற்றும் முயற்சிகளில் உறுதியுடன் செயல்படுவோம் எனச் சொல்லி தனது அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார். RealAudioMP3








All the contents on this site are copyrighted ©.