2009-05-04 14:54:06

வரலாற்றில் மே 05


மறைசாட்சியான புனித ஆஞ்சலோவின் விழா. கார்மேல் சபை துறவியாகிய இவர். ஒரு காட்சியில் இயேசு கூறியதைப் பின்பற்றி இத்தாலியின் சிசிலிக்குச் சென்றார். அங்கு பல யூதர்களை மனமாற்றினார். எனினும் அவர் ஒருநாள் போதித்துக் கொண்டிருந்த போது பகைவர்களால் கடுமையாய் வெட்டப்பட்டார். படுகாயமடைந்து உயிர் பிரியும் போது தம் மக்களுக்காகவும், தன்னைக் கொன்றவர்களுக்காவும் செபித்துக் கொண்டிருந்தார்.

இதே மே 5, 553 இரண்டாம் கான்ஸ்டாண்டிநோபிள் சங்கம் தொடங்கியது.

1494 கிறிஸ்டோபர் கொலம்பஸ் ஜமய்க்கா தீவில் சென்றிறங்கி அது ஸ்பெயினுக்குச் சொந்தமென அறிவித்தார்.

1821 - பிரெஞ்சு மன்னன் நெப்போலியன் பொனபார்ட், தென் அட்லாண்டிக்ட் பெருங்கடலிலுள்ள செயின்ட் ஹெலெனா தீவில் நாடு கடத்தப்பட்டிருந்த போது இறந்தார்.

1925 - தென்னாபிரிக்காவில் ஆபிரிக்கான் மொழி அதிகாரபூர்வ மொழியானது.

1944 - மகாத்மா காந்தி சிறையிலிருந்து விடுதலையானார்.

1964 - மே 5 ஐரோப்பிய தினம் என்று ஐரோப்பிய அவை அறிவித்தது.

1976 - புதிய தமிழ்ப் புலிகள் என்ற பெயருடனிருந்த இயக்கத்திற்கு தமிழீழ விடுதலைப் புலிகள் என்று பெயர் மாற்றப்பட்டது.

1818 - ஜெர்மனிய மெய்யியலாளர் கார்ல் மார்க்ஸ் பிறந்தார்

சர்வதேச மருத்துவச்சிகள் தினம்.








All the contents on this site are copyrighted ©.