2009-05-01 18:10:21

கர்தினால் நியூமனின் பரிந்துரையால் உடல் நலம் . 010509 .


கர்தினால் நியூமனின் பரிந்துரையால் நலம் பெற்றதாகத் தெரிவிக்கிறார் மார்ஸ்பீல்டின் பெம்ப்ரோக் நகரத் தியாக்கோன் சலைவன் . 70 வயதாகும் தியாக்கோன் சலைவன் தீராத முதுகுவலியால் அவதியுற்று வந்தார் . ஏப்ரல் 28 ல் பிரிட்டிஷ் செய்தித்தாள் ஒன்று சலைவன் முழுக்குணம் அடைந்திருப்பது கர்தினால் நியூமனின் பரிந்துரையால்தான் எனத் தெரிவித்துள்ளது . அந்த அற்புத நிகழ்ச்சியை வத்திக்கான் ஏற்றுக்கொண்டால் கர்தினால் நியூமனுக்கு முத்துப்பேறு பட்டம் அளிக்க முடியும் . ஆனால் ஏப்ரல் 30 வரை வத்திக்கான் இதுபற்றி ஏதும் தெரிவிக்கவில்லை .








All the contents on this site are copyrighted ©.