வத்திக்கான் பொருட்காட்சி சாலை நில நடுக்கப் பாதிப்புக்கு உதவி.300409.
வத்திக்கான் பொருட்காட்சி சாலை வழக்கமாக ஞாயிறு தினங்களில் மூடப்பட்டிருக்கும் . நுழைவுக்
கட்டணம் வசூலிக்கப்படும் .இத்தாலியின் லாஆக்கிலாவில் பூமி அதிர்ச்சியால் பாதிக்கப்பட்ட
மக்களுக்கு உதவுவதற்காக மே மாதம் 10 ஆம் தேதி ஞாயிறு அன்று வத்திக்கான் பொருட்காட்சிசாலை
திறந்திருக்கும் என்றும் அன்றைய வசூல் லாஆக்கிலாவுக்கு வழங்கப்படும் என்றும் வத்திக்கான்
செய்தி கூறுகிறது . கோடைகாலம் தொடங்கியுள்ளதால் ஒவ்வொரு நாளும் இலட்சத்துக்கும் அதிகமான
சுற்றுலாப் பயணிகள் உரோமைக்கு வருகிறார்கள் என்பதும் நுழைவதற்கு முன்னர் வெகு தொலைவு
கியூ வரிசையில் நிற்கவேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது .