2009-04-29 14:50:57

சமய சார்பற்ற தன்மையைப் பாதுகாத்தல், சிறுபான்மையினரின் உரிமைகளை அங்கீகரித்தல், ஏழ்மைக்கெதிராய் நடவடிக்கை எடுத்தல் ஆகியவைகளில் இந்தியாவின் வருங்கால அரசு கவனம் செலுத்த வேண்டும், ஆயர் தாப்ரே


ஏப்.29,2009. சமய சார்பற்ற தன்மையைப் பாதுகாத்தல், சிறுபான்மையினரின் உரிமைகளை அங்கீகரித்தல், ஏழ்மைக்கெதிராய் நடவடிக்கை எடுத்தல் ஆகியவைகளில் இந்தியாவின் வருங்கால அரசு கவனம் செலுத்த வேண்டும் என்றார் புனே மறைமாவட்டத்திற்கென நியமிக்கப்பட்டுள்ள ஆயர் தாமஸ் தாப்ரே.

இந்தியாவில் மக்களவை தேர்தல்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இவ்வேளையில் ஆசிய செய்தி நிறுவனத்துக்குப் பேட்டியளித்த, தற்போதைய வசை மறைமாவட்ட அப்போஸ்தலிக்க நிர்வாகி ஆயர் தாப்ரே, இந்திய தாய் நாட்டில் சிறுபான்மையினர் நீதி நியாயத்துடன் நடத்தப்பட வேண்டும் என்றார்.

இந்தியாவின் அரசியலமைப்பு எண் 25ன்படி ஒவ்வொரு மதத்தின் அனைத்து விசுவாசிகளும் தங்களது மதத்தைச் சுதந்திரமாகக் கடைபிடிக்கவும், அதனைப் பரப்பவும் உத்தரவாதம் வழங்கப்படுகிறார்கள் என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்தியாவின் ஏறத்தாழ இருபது கோடி மக்கள். அதாவது மொத்த மக்கட்தொகையுள் சுமார் ஆறில் ஒரு பகுதியினர் சிறுபான்மை கலாச்சார மற்றும் சமயங்களைச் சார்ந்தவர்கள் என்றுரைத்த ஆயர் தாப்ரே, இவை புறக்கணிக்கப்படவோ அல்லது ஓரங்கட்டப்படவோ கூடாது என்றார்.

சிறுபான்மையினர் அமுக்கப்படும் ஒரு சூழலில் ஒரு நாட்டில் முன்னேற்றமும் வளர்ச்சியும் இடம் பெறாது என்றும் ஆயர் தெரிவித்தார்.

இதற்கிடையே, மூன்றாவது கட்டமாக இவ்வியாழனன்று தேர்தல் நடைபெறவுள்ள 107 தொகுதிகளுக்கான தேர்தல் பிரச்சாரம் இச்செவ்வாயுடன் ஓய்ந்தது. இந்திய நாடாளுமன்ற தேர்தல் 5 கட்டங்களாக நடைபெறுகிறது.








All the contents on this site are copyrighted ©.