2009-04-29 14:55:46

இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையே பாதுகாப்பான போர் நிறுத்தத்தை ஏற்படுத்த பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் இலங்கைக்குப் பயணம்


ஏப்.29,2009. இலங்கையைச் சேர்ந்த நான்கு பேருக்கு, கொலைக்குற்றத்திற்காக டோஹா நீதிமன்றம் வழங்கியிருந்த மரண தண்டனையை உயர் நீதிமன்றம் இரத்து செய்துள்ளது என்று ஊடகங்கள் கூறுகின்றன.

மட்டக்களப்பு ஏறாவூர் பகுதியைச் சேர்ந்த மனோகரன் என்பவரை நான்கு பேரும் இரும்புக் கம்பியால் தாக்கி படுகொலை செய்த குற்றத்திற்காக அவர்களுக்கு டோஹா நீதிமன்றம் மரண தண்டனை வழங்கியிருந்தது.

உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடு பரிசீலனை செய்யப்பட்டதன் விளைவாக அந்நால்வருக்கும் மரண தண்டனை இரத்து செய்யப்பட்டு பத்தாண்டு கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் நடைபெற்று வரும் ஆயுதப் போராட்டத்தின் விளைவே இந்தப் படுகொலைக்கான காரணம் என வழக்கறிஞர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மேலும், இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையே பாதுகாப்பான போர் நிறுத்தத்தை ஏற்படுத்தவும் முகாம்களில் வாழும் மக்களைச் சந்திக்கவுமென பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் இலங்கைக்கு இப்புதனன்று ஒருநாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டனர்.

இதற்கிடையே, முல்லைத்தீவில் பாதுகாப்பு வலய பகுதி நோக்கி அரசுப் படையினர் நடத்திய கடும் பீரங்கி மற்றும் வான் தாக்குதல்களில் பல நூற்றுக்கணக்கான தமிழர்கள் கோரமாக படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்று இப்புதன் காலை செய்திகள் கூறுகின்றன.








All the contents on this site are copyrighted ©.