2009-04-27 11:35:45

யோவான் (அருளப்பர்) நற்செய்தி அதிகாரம் 6, 22- 29 .


யோவான் (அருளப்பர்) நற்செய்தி அதிகாரம் 6, 22- 29 .

அதிகாரம் 6



22 சீடர்கள் புறப்பட்ட கரையிலேயே மறு நாளும் மக்கள் கூட்டமாய் நின்று கொண்டிருந்தார்கள். முந்தின நாள் ஒரு படகைத்தவிர வேறு படகு எதுவும் அங்கு இல்லை என்பதையும் அதில் இயேசுவின் சீடர்கள் மட்டும் போனார்களே அன்றி இயேசு அவர்களோடு அப்படகில் ஏறவில்லை என்பதையும் அவர்கள் கண்கூடாகப் பார்த்திருந்தார்23 அப்போது, ஆண்டவர் கடவுளுக்கு நன்றி செலுத்திக் கொடுத்த உணவை மக்கள் உண்ட இடத்திற்கு அருகில் திபேரியாவிலிருந்து படகுகள் வந்து சேர்ந்தன.24 இயேசுவும் அவருடைய சீடரும் அங்கு இல்லை என்பதைக் கண்ட மக்கள் கூட்டமாய் அப்படகுகளில் ஏறி இயேசுவைத் தேடிக் கப்பர்நாகுமுக்குச் சென்றனர்.25 அங்கு கடற்கரையில் அவர்கள் அவரைக் கண்டு, ' ரபி, எப்போது இங்கு வந்தீர்? ' என்ற கேட்டார்கள்.26 இயேசு மறுமொழியாக, ' நீங்கள் அரும் அடையாளங்களைக் கண்டதால் அல்ல, மாறாக, அப்பங்களை வயிறார உண்டதால்தான் என்னைத் தேடுகிறீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.27 அழிந்துபோகும் உணவுக்காக உழைக்க வேண்டாம். நிலைவாழ்வு தரும் அழியாத உணவுக்காகவே உழையுங்கள். அவ்வுணவை மானிடமகன் உங்களுக்குக் கொடுப்பார். ஏனெனில் தந்தையாகிய கடவுள் அவருக்கே தம் அதிகாரத்தை அளித்துள்ளார் ' என்றார்.28 அவர்கள் அவரை நோக்கி, ' எங்கள் செயல்கள் கடவுளுக்கு ஏற்றவையாக இருப்பதற்கு நாங்கள் என்ன செய்ய வேண்டும்? ' என்று கேட்டார்கள்.29 இயேசு அவர்களைப் பார்த்து, ' கடவுள் அனுப்பியவரை நம்பவதே கடவுளுக்கேற்ற செயல் ' என்றார்.








All the contents on this site are copyrighted ©.