2009-04-27 15:30:02

ஏப்ரல் 28 நற்செய்தி யோவா. 6 : 30-35


அவர்கள், ' நாங்கள் கண்டு உம்மை நம்பும் வகையில் நீர் என்ன அரும் அடையாளம் காட்டுகிறீர்? அதற்காக என்ன அரும் செயல் செய்கிறீர்? எங்கள் முன்னோர் பாலை நிலத்தில் மன்னாவை உண்டனரே! ' அவர்கள் உண்பதற்கு வானிலிருந்து உணவு அருளினார் ' என்று மறைநூலிலும் எழுதப்பட்டுள்ளது அல்லவா! ' என்றனர். இயேசு அவர்களிடம், ' உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்; வானிலிருந்து உங்களுக்கு உணவு அருளியவர் மோசே அல்ல; வானிலிருந்து உங்களுக்கு உண்மையான உணவு அருள்பவர் என் தந்தையே. கடவுள் தரும் உணவு வானிலிருந்து இறங்கி வந்து உலகுக்கு வாழ்வு அளிக்கிறது ' என்றார். அவர்கள், ' ஐயா, இவ்வுணவை எங்களுக்கு எப்போதும் தாரும் ' என்று கேட்டுக்கொண்டார்கள். இயேசு அவர்களிடம், ' வாழ்வு தரும் உணவு நானே. என்னிடம் வருபவருக்குப் பசியே இராது; என்னிடம் நம்பிக்கை கொண்டிருப்பவருக்கு என்றுமே தாகம் இராது என்றார்







All the contents on this site are copyrighted ©.