2009-04-25 15:44:44

செயின்ட் வின்சென்ட் கிரேனடின்ஸ் பிரதமர் திருத்தந்தையைச் சந்தித்தார்


ஏப்.25,2009. செயின்ட் வின்சென்ட் கிரேனடின்ஸ் பிரதமர் ரால்ப் ஈவ்ரார்டு கொன்சால்வெஸ் இன்று திருத்தந்தையை வத்திக்கானில் சந்தித்தார்.

திருத்தந்தையை சந்தித்த பின்னர் திருப்பீடச் செயலர் கர்தினால் தர்ச்சீசியோ பெர்த்தோனே, நாடுகளுக்கிடையேயான உறவுகளின் செயலர் பேராயர் தொமினிக் மம்பர்த்தி ஆகியோரையும் சந்தித்தார் பிரதமர் ரால்ப்.

இச்சந்திப்புகளில் அந்நாட்டின் சமூக, இன மற்றும் சமய விவகாரங்கள் பற்றிய கருத்துக்கள் பகிர்ந்து கொள்ளப்பட்டன என்று திருப்பீட பத்திரிகை அலுவலகம் அறிவித்தது.

கரீபியன் கடலில் அமைந்துள்ள தீவு நாடான செயின்ட் வின்சென்ட் கிரேனடின்ஸ், 125 சிறிய தீவுகளை உள்ளடக்கியது. இதன் மொத்த பரப்பளவு 389 சதுர கிலோ மீட்டராகும்.








All the contents on this site are copyrighted ©.