2009-04-24 17:53:57

விவிலியத்தை திருச்சபையின் நம்பிக்கையோடு பயில்க என்கிறார் திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட் . 240409 .


இம்மாதம் 23 ஆம் தேதி திருப்பீடத்தின் விவிலியக் குழு திருத்தந்தையைச் சந்தித்தது . விவிலியத்தில் இறைத்தூண்டலும் , உண்மையும் என்பது பற்றி அண்மையி்ல் கருத்தரங்கு நடந்து முடிந்தது . அதில் கலந்து கொண்டவர்களை வரவேற்றுப் பேசிய திருத்தந்தை விவிலியத்தின் உட்பொருளை சரியாக உய்த்துணர மூன்று அடிப்படைத் தத்துவங்களைத் தெரிவித்தார் . இதனை வத்திக்கானின் 2 வது பொதுச்சங்கம் தெளிவுபடுத்தியுள்ளது . விவிலியத்தின் ஒருமைத்தன்மை , விவிலியம் பற்றிய திருச்சபையின் பாரம்பரிய நம்பிக்கை மற்றும் இறைத்திட்டத்திலும் திருவெளிப்பாட்டிலும் நம் இறை விசுவாசத்தின் பல்வேறு நம்பி்க்கைகளின் ஒருங்கிணைந்த தன்மை ஆகியவற்றைக் கருத்தில் கொள்ளவேண்டும் எனத் தெரிவித்தார் திருத்தந்தை. விவிலிய வல்லுநர்கள் தனிப்பட்ட முறையில் விவிலியத்தை ஆராய்வதில் அல்ல , திருச்சபை கொண்டுள்ள விசுவாசத்தோடு விவிலியத்தைக் கண்நோக்கவேண்டும் எனத் தெரிவித்தார் திருத்தந்தை16 ஆம் பெனடிக்ட் .








All the contents on this site are copyrighted ©.