2009-04-24 17:53:26

கடவுள் நம்மோடு இருக்கிறார் என்கிறார் திருத்தந்தை . 240409 .


கிறிஸ்தவக் கீழ்ப்படிதல் என்பது குடும்ப ஒற்றுமையைப்போல அன்பை அடித்தளமாகக் கொண்டது என்கிறார் திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட். இவ்வாண்டு ஜனவரியில் மெக்சிக்கோவில் நடந்த அகில உலக ஆறாவது குடும்பக் கருத்தங்கை நடத்தியவர்களுக்குத் ஏப்ரல் 23 ல் திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட் சிறப்புத்திருப்பலி நடத்தினார் . அவர் ஆற்றிய மறையுரையின்போது கடவுளுடைய சட்டங்களுக்குக் கீழ்ப்படிவது என்பது வெறும் அடிமைத்தனமல்ல , மாறாக கடவுளோடு கொண்டுள்ள ஆத்மார்த்தமான நல்லுறவில் அடங்கியுள்ளது . கடவுளிடமிருந்து வரக்கூடிய திட்டங்கள் எல்லாவற்றையும் விட மிக மேலானது என்பதை உள்ளூர உணர்ந்து தெளிவடைவதில் உள்ளது எனக் கூறினார் திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட் . ஒவ்வொரு நாளும் தம் மகிழ்ச்சியையும் , நம்பிக்கைகளையும் , கவலைகளையும் குடு்ம்பங்கள் பகிர்ந்து கொள்வது போல கடவுளிடமும் நாம் உறவு கொண்டு அவருக்கு நாம் அதே வகையான கீழ்ப்படிதலைக் காட்டவேண்டும் எனத் திருத்தந்தை கேட்டுக்கொண்டார் . இல்லறத்தில் பல ஆண்டுகள் இணைந்து ஒருவர் ஒருவரோடு நல்லுறவில் வாழும் தம்பதியர் உலகுக்கு இன்று தேவையுறும் இந்தக் கீழ்ப்படிதலை பிரதிபலிப்பதாக திருத்தந்தை மேலும் தெரிவித்தார் . 6 வது அகில உலகக் கருத்தரங்கை மெக்சிக்கோவில் சென்ற ஜனவரி நடத்திய குழுவினரோடு மெக்சிக்கோவின் கர்தினால் நார்பெர்ட்டோ கரேரா உரோமைக்கு வந்திருந்தார். திருத்தந்தையின் திருப்பலியில் திருப்பீட இல்லற வாழ்வு மன்றத்தின் தலைவர் கர்தினால் மற்றும் கர்தினால் நார்பெர்ட் கரேரா கலந்துகொண்டனர் .








All the contents on this site are copyrighted ©.