ஐநா சபையிடம் கிறிஸ்தவர்களுக்கு எதிரான போக்கைக் கண்டிக்குமாறு கோரிக்கை.240409.
கிறிஸ்தவர்களுக்கு எதிராக மக்கள் வெளிப்படுத்தும் வெறுப்பை ஐ.நாடுகள் சபை உணரவேண்டும்
என்கின்றனர் இரஷ்யாவின் ஆர்த்தோடாக்ஸ் கிறிஸ்தவ சபையினர் . ஐநா சபையின் சமீப ஜெனீவாக்
கருத்தரங்கில் யூதர்களுக்கும் இஸ்லாமியருக்கும் எதிராகக் காட்டப்படும் வெறுப்புணர்வை
நீக்க வேண்டும் என விவாதம் நடந்தது . கிறிஸ்தவத்துக்கும் கிறிஸ்தவ மதச் சுதந்திரத்திற்கும்
, எதிராகக் காட்டப்படும் வெறுப்புணர்வையும் , கிறிஸ்தவர்களின் உணர்வுகளைப் புண்படுத்தும்
போக்கையும் , கிறிஸ்தவக் கொள்கைகளைத் திரித்துப் பேசும் போக்கையும் ஐநா தெரிந்து அவற்றைத்
தவிர்க்க ஆவன செய்யவேண்டும் என ரஷ்ய ஆர்த்தோடாக்ஸ் சபைகளின் செய்தித் தொடர்பாளர் தலைமைக்குரு
கிரகோரி ரியாபிக் தெரிவித்துள்ளார் .