2009-04-23 18:38:48

ஐநாடுகள் சபையின் ஜெனீவாக் கருத்தரங்கில் பேராயர் தோமாசி.230409.


ஐநாடுகள் சபையின் ஜெனீவாக் கருத்தரங்கில் மனித உரிமைகள் பற்றியும் இனப் பாகுபாடு பற்றியும் கருத்து வழங்கினார் பேராயர் சில்வானோ தோமாசி . பேராயர் சில்வானோ தோமாசி ஜெனீவாவில் இயங்கும் ஐநா சபையில் வத்திக்கான் திருப்பீட நிரந்தர உறுப்பினர் .

வத்திக்கானின் ஐநா சபைக்கான தூதுக்குழு எல்லா வகையான மனித இன வேறுபாடுகளையும் நீக்குமாறு ஐநா சபையின் 2 ஆவது டர்பன் கருத்தரங்கில் வேண்டுகோள் வைத்துள்ளது . மனிதர்கள் அனைவரும் சுதந்திரமாகப் பிறந்தவர்கள் என்றும் மனித மாண்பிலும் உரிமையிலும் சம உரிமையுள்ளவர்கள் என்றும் கூறினார் . மனிதர்கள் ஒருவர் ஒருவரோடு உறவும் தொடர்பும் கொள்ள ஒரு புறம் சார்ந்தவர்களாக தம்மைச் சேராத மற்ற இனங்கள் , சாதியினர் பற்றி தவறான கருத்துக்களை மனதில் கொண்டு செயல்படக்கூடாது எனத் தெரிவித்தார் . தம் இனம் மட்டுமே சிறந்தது என்ற கருத்துடையவர்கள் தம் இனத்தவரைத் தவிர மற்ற சமூகத்தினரைத் தாழ்ந்தவர்களாக் கருதுவது தவறு எனத் தெரிவித்தார் பேராயர் சில்வானோ தோமாசி . 8 ஆண்டுகளுக்கு முன்னர் இன வேறுபாடுகளை நீக்குவதற்கு டர்பன் அறிக்கையில் ஏற்றுக் கொண்ட ஒப்பந்தங்கள் இன்னும் முழுமையாகச் செயல்படாதிருப்பதற்கு வருத்தம் தெரிவித்தார் பேராயர் . இந்தக் குழு அமர்வில் மனித சமுதாயம் முழுவதும் ஒரே குடும்பம் என்பதையும் பல் வேறு திறமைகளைக் கொண்டது என்பதையும் ஏற்றுக் கொண்டு நம் அனைவருக்கும் சம மாண்பும் சம உரிமைகளும் உள்ளன என்பதையும் மனதில் கொண்டு இன வேறுபாட்டால் துயருறும் மக்கள் விடுதலைக்காக நம் பயணத்தைத் தொடர்வோம் எனக் கருத்துக்களைப் பகிர்ந்தார் வத்திக்கான் திருப்பீட ஜெனீவா ஐநாடுகள் சபையின் நிரந்தர உறுப்பினர் பேராயர் சில்வானோ தோமாசி .








All the contents on this site are copyrighted ©.