2009-04-23 18:42:43

இயேசுசபை அமெரிக்க வல்லுநரின் தனி ஆவணங்கள் ஆராயப்பட உள்ளன.2304


இயேசு சபையைச் சேர்ந்த அமெரிக்க வல்லுநரின் தனி ஆவணங்கள் முந்நாள் திருத்தந்தை 12 ஆம் பத்திநாதர் பற்றி விளக்கம் தர ஆராயப்பட உள்ளன .

இயேசு சபையைச் சேர்ந்த அருள் தந்தை இராபர்ட் கிரகாம் 2 ஆம் உலகப்போர் பற்றிய மிகப் புகழ் பெற்ற அமெரி்க்க வல்லுநர் . அவர் 1997 ஆம் ஆண்டு காலமாகும் வரை 2 ஆம் உலகப் போர்க்காலத்தில் திருத்தந்தை 12 ஆம் பத்திநாதரின் செயல்பாடுகள் பற்றிய சிறந்த ஆவணங்களைச் சேகரித்து வைத்துள்ளார் . விஷவாயுச் சிறைகளிலிருந்து ஐரோப்பாவின் யூத இனத்தவரைக் காப்பதற்குத் திருத்தந்தை மேற்கொண்ட முயற்சிகள் பற்றி தந்தை இராபர்ட் சேகரித்த ஆவணங்களை ஆராய்ந்து தெளிவான முடிவுக்கு வர இயேசு சபையின் பெருந்தலைவர் அருள்தந்தை அடால்போ நிக்கோலாஸ் அனுமதி வழங்கியுள்ளார் . 2 ஆம் உலகப்போரின் போது திருத்தந்தை 12 ஆம் பத்திநாதர் நாசிக் கட்சியினரோடு தொடர்பு கொண்டு யூதர்களுக்குச் செய்த சேவைகள் பற்றி தந்தை இராபர்ட் கிரகாம் 25,000 பக்கங்கள் கொண்ட ஆவணங்கள் , மற்றும் தடயங்களைச் சேகரித்து வைத்துள்ளார் . இயேசு சபையின் தலைமையகத்தில் புனிதர் பட்டம் வழங்குவதற்காகச் செயல்படும் தந்தை பீட்டர் கிரம்பல்லின் பரிந்துரையின் பேரில் இயேசுசபைத் தலைவர் அருள்தந்தை அடால்போ நிக்கோலாஸ் ஆய்வுக்கு அனுமதி வழங்கியுள்ளார் .








All the contents on this site are copyrighted ©.