2009-04-18 16:11:07

பாகிஸ்தானில் தேவநிந்தனை சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கப்பட்டிருந்த இரண்டு கத்தோலிக்கர் குற்றமற்றவர்கள் என்று சொல்லி விடுதலை செய்யப்பட்டுள்ளனர்


ஏப்.18,2009: பாகிஸ்தானில் தேவநிந்தனை சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கப்பட்டிருந்த இரண்டு கத்தோலிக்கர் குற்றமற்றவர்கள் என்று சொல்லி லாகூர் உயர்நீதிமன்றம் அவர்கலை விடுதலை செய்ய உத்தரவிட்டுள்ளது.

ஜேம்ஸ் மாசிக், பூட்டா மாசிக் ஆகிய இருவரும் குரான் புனித நூலை தெருவில் எரித்தார்கள் என்று குற்றம் சாட்டப்பட்டு 2006ம் ஆண்டிலிருந்து சிறையில் இருந்து வந்தனர். இவர்கள் கைது செய்ய்ப்பட்ட பின்னர் பத்தாண்டுகள் தண்டனையும், தலா 25 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டனர்.

பாகிஸ்தானில் தேவநிந்தனை சட்டத்தின்கீழ் 1986ம் ஆண்டிலிருந்து குறைந்தது 892 பேர் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.








All the contents on this site are copyrighted ©.