2009-04-16 15:51:47

ஹாங்காங்கின் கர்தினால் ஷென் பதவி ஓய்வு பெறுகிறார். 160409 .


ஹாங்காங் நாட்டின் புகழ்மிக்க கர்தினால் ஜோசப் ஷென் 77 வயதுடையவர் . அவர் பதவி ஓய்வு கோரி அளித்த விண்ணப்பத்தை திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட் ஏற்றுக் கொண்டார் . 69 வயதாகும் உதவி ஆயர் ஜான் டாங்கிடம் மறைமாவட்டத்தின் பொறுப்பு ஒப்படைக்கப்படுகிறது .

கர்தினால் ஷென் நாட்டின் முக்கிய முடிவுகள் பற்றியும், சீனாவில் கத்தோலிக்கத் திருச்சபை பற்றியும் கவனத்தில் கொள்வார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது . கர்தினால் ஷென் பற்றித் தெரிவித்த உதவி ஆயர் ஜான் டாங் அவருடைய மனித உரிமைகளுக்கான போராட்டம் பற்றிக் கூறும் போது ஞானம் , நன்மைத்தனம் . அஞ்ஞாமை மற்றும் குறிக்கோள்களை நிறைவேற்றுபவர் எனத் தெரிவித்துள்ளார் . கர்தினாலின் அறைகூவல் மக்களுக்கு விழிப்புணர்ச்சி அளித்ததாகத் தெரிவித்தார் . கர்தினாலின் ஓய்வுக்குப் பிறகு ஹாங்காங்கில் உள்ள தூய ஆவியார் குருகுலத்தில் தங்குமாறு அழைப்பு விடுத்துள்ளதாக உதவி ஆயர் தெரிவித்துள்ளார் . புனித வியாழனன்று செய்தி நிருபர்களுக்குப் பேட்டி அளித்த கர்தினால் ஷென் ஹாங்காங்கின் முக்கியத் தலைவர் டோனால்டு யாம்குவென் நாட்டை நீதியுள்ளதாக நடத்தி பின் தங்கியவர்களைக் கருத்தில் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார் .








All the contents on this site are copyrighted ©.