2009-04-14 15:01:28

குடிமக்களின் உரிமைகளோடு, பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார உரிமைகள் மதிக்கப்பட வேண்டும், இந்திய இயேசு சபையினர்


ஏப்ரல்14,2009. குடிமக்களின் உரிமைகளோடு, பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்திய நாடாளுமன்றத் தேர்தல்களையொட்டி அறிக்கை வெளியிட்டுள்ளனர் இந்திய இயேசு சபையினர்.

ஏப்ரல் 16 முதல் மே 13 வரை நடைபெறவுள்ள தேர்தல்களையொட்டி தங்களது எதிர்பார்ப்புகள் அடங்கிய அறிக்கையை நாட்டின் வருங்காலத் தலைவர்களுக்கென வெளியிட்டுள்ள இந்திய இயேசு சபையினர், குடிமக்களில், குறிப்பாக கடும் வறுமையில் வாடும் மக்களில் நம்பிக்கைகள் ஊட்டப்பட வேண்டும் எனக் கோரியுள்ளனர்.

மனித உரிமைகளைப் பாதுகாக்கும் அதேவேளை, சமுதாயத்தில் நலிந்தோர், ஒதுக்கப்பட்டோர் மற்றும் பாகுபடுத்தப்பட்டோரின் உரிமைகள் பாதுகாக்கப்பட எதிர்கால அரசியல் தலைவர்கள் தங்களை அர்ப்பணிக்குமாறு கேட்டுள்ளது அவ்வறிக்கை.

உணவு, குடியிருப்பு, கல்வி, சுகாதாரம் போன்ற அடிப்படை வசதிகளுக்கும் சமய சுதந்திரத்திற்கும் உறுதி வழங்க வேண்டும், ஜாதிகளற்ற அமைப்பு உருவாகவும் மக்கள் நல்லிணக்கத்துடன் வாழவும் வழி செய்யப்பட வேண்டும் எனவும் அவ்வறிக்கை வருங்கால இந்திய அரசியல் தலைவர்களுக்கு அழைப்புவிடுக்கிறது.








All the contents on this site are copyrighted ©.