2009-04-07 15:13:18

இலங்கையில் கத்தோலிக்கர்கள் புனித வெள்ளியன்று வேலை செய்யக் கட்டாயப்படுத்தபடுகின்றனர், கொழும்பு பேராயர்


ஏப்ரல்07,2009. இலங்கையில் புனித வெள்ளியை விடுமுறை நாளாக அரசு அறிவித்துள்ள போதிலும் சில வங்கிகள் கத்தோலிக்கர்களை அந்நாளில் வேலை செய்யக் கட்டாயப்படுத்தபடுவதாக புகார் ஒன்றை அரசுக்கு அனுப்பியுள்ளார் கொழும்பு பேராயர் ஆஸ்வால்டு கோமஸ்.

இலங்கையின் மதவிவகாரங்களுக்கான அமைச்சகத்தின் கிறிஸ்தவ விவகாரப் பிரிவு வழி தன் புகாரை அனுப்பியுள்ள பேராயர், வங்கி ஊழியர்கள் தன்னிடம் இது குறித்து பேசியதையும் கடந்த சில ஆண்டுகளில் பல தொழிற்சாலைகள் கத்தோலிக்கர்களைப் புனித வெள்ளியன்று வேலை செய்யக் கட்டாயப்படுத்தி மதவழிபாடுகளில் பங்குபெற முடியாவண்ணம் அவர்களை நடத்தியுள்ளதையும் அதில் எடுத்தியம்பியுள்ளார்.

இலங்கை அரசின் ஆணையையும் மீறி சில வங்கிகளும் தொழிற்சாலைகளும் புனித வெள்ளி மதவழிபாடுகளில் கலந்து கொள்ளக் கத்தோலிக்கர்களுக்கு உதவ மறுப்பதைச் சுட்டிக் காட்டிய கொழும்பு பேராயர் கோமஸ், புனித வெள்ளியை விடுமுறையாக அறிவிக்கும் வங்கிகள் 11ம் தேதி சனிக்கிழமையை பணி நாளாக அறிவிக்கலாம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.








All the contents on this site are copyrighted ©.